ஆன்மிகம்
ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் 2-ம் நாள் ஊஞ்சல் உற்சவ விழா

ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் 2-ம் நாள் ஊஞ்சல் உற்சவ விழா

Published On 2021-11-08 08:27 GMT   |   Update On 2021-11-08 08:27 GMT
உற்சவர் ரெங்கநாச்சியார் முத்துசாய் கிரீடம், வைரத்தோடு, ரத்தின அபயஹஸ்தம், காசுமாலை, முத்துச்சரம், பவளமாலை, அடுக்கு பதக்கம் உள்ளிட்ட திருஆபரணங்கள் அணிந்து ஊஞ்சல் உற்சவம் கண்டருளினார்.
ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் நடைபெறும் ரெங்கநாச்சியார் ஊஞ்சல் உற்சவம் மிகவும் சிறப்பு வாய்ந்தது. இந்நிகழ்வு டோலோத்ஸவம் என்றும் அழைக்கப்படுகிறது. ரெங்கநாச்சியார் ஊஞ்சல் உற்சவம் 6-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இந்த விழா வருகிற 12-ந் தேதி வரை 7 நாட்கள் நடைபெறுகிறது.

ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் ரெங்க நாச்சியார் ஊஞ்சல் உற்சவசம் நடைபெற்று வருகிறது. 2-ம் நாளான நேற்று உற்சவர் ரெங்கநாச்சியார் முத்துசாய் கிரீடம், வைரத்தோடு, ரத்தின அபயஹஸ்தம், காசுமாலை, முத்துச்சரம், பவளமாலை, அடுக்கு பதக்கம் உள்ளிட்ட திருஆபரணங்கள் அணிந்து ஊஞ்சல் உற்சவம் கண்டருளினார்.

ஊஞ்சல் உற்சவ நாட்களில் காலை 6.30 மணிமுதல் காலை 7.30 மணிவரை, காலை 9 மணிமுதல் நண்பகல் 12.30 மணிவரை, மாலை 5.30 மணிமுதல் இரவு 8.30 மணிவரை மூலவர் சேவை உண்டு. மாலை 3 மணி முதல் மாலை 5.30 மணி வரையும், இரவு 8.30 மணிக்கு மேல் மூலவர் சேவை கிடையாது.

Tags:    

Similar News