செய்திகள்
டூ பிளெசிஸ்

ஐபிஎல் இறுதிப்போட்டி- கொல்கத்தா அணிக்கு 193 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது சென்னை

Published On 2021-10-15 15:54 GMT   |   Update On 2021-10-15 18:41 GMT
ஐபிஎல் இறுதிப்போட்டியில் கொல்கத்தா அணியின் பந்து வீச்சை வெளுத்து வாங்கிய டூ பிளெசிஸ் 86 ரன்கள் குவித்தார்.
துபாய்:

ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டி துபாயில் இன்று நடக்கிறது. இதில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. டாஸ் வென்ற கொல்கத்தா அணி பீல்டிங்கை தேர்வு செய்தது. 

முதலில் பேட்டிங் செய்த சென்னை அணியின் துவக்க வீரர்கள் ருதுராஜ் கெய்க்வாட், டூ பிளெசிஸ் முதலில் நிதானமாக ஆடினர். பின்னர் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இதனால் அணியின் ஸ்கோர் விறுவிறுவென உயர்ந்தது. கெய்க்வாட் 32 ரன்கள் சேர்த்த நிலையில், சுனில் நரைன் பந்தில் ஆட்டமிழந்தார். இதையடுத்து ராபின் உத்தப்பா களமிறங்கினார்.



கொல்கத்தா பந்து வீச்சை வெளுத்து வாங்கிய டூ பிளெசிஸ், 35 பந்துகளில் அரை சதம் கடந்தார். மறுமுனையில் அதிரடி காட்டிய உத்தப்பா, தன் பங்கிற்கு 31 ரன்கள்  குவித்து ஆட்டமிழந்தார். அவரைத் தொடர்ந்து களமிறங்கிய மொயீன் அலியும் பந்துகளை பவுண்டரி, சிக்சர்களாக பறக்கவிட்டார். 86 ரன்கள் குவித்த டூ பிளெசிஸ் கடைசி பந்தில் அவுட் ஆனார்.

20 ஓவர் முடிவில் சென்னை அணி 3 விக்கெட்களை இழந்து 192 ரன்கள் குவித்தது. மொயீன் அலி 37 ரன்களுடன்  ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தார்.

இதையடுத்து 193 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் கொல்கத்தா அணி களமிறங்கியது.
Tags:    

Similar News