செய்திகள்
ஜெகன் மோகன் ரெட்டி

ஆந்திராவில் வீடு தேடி வரும் ரேஷன் பொருள்

Published On 2021-01-21 20:37 GMT   |   Update On 2021-01-21 20:37 GMT
ஆந்திராவில் ரேஷன் பொருட்கள், வீட்டுக்கே சென்று வினியோகிக்கும் திட்டத்தை முதல்-மந்திரி ஜெகன் மோகன் ரெட்டி கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
விஜயவாடா:

ஆந்திராவில் ரேஷன் பொருட்கள், வீட்டுக்கே சென்று வினியோகிக்கப்பட உள்ளது. இதற்காக ரூ.539 கோடி செலவில் 9 ஆயித்து 260 வாகனங்களை மாநில அரசு வாங்கி உள்ளது.

இவற்றில், குண்டூர், கிருஷ்ணா, மேற்கு கோதாவரி ஆகிய மாவட்டங்களுக்கான சுமார் 2 ஆயிரத்து 500 வாகனங்களை முதல்-மந்திரி ஜெகன் மோகன் ரெட்டி நேற்று விஜயவாடாவில் கொடியசைத்து தொடங்கி வைத்தார். ரேஷன் பொருட்கள் வழங்கப்பட உள்ள மறுபயன்பாட்டு பைகளையும் அவர் ஆய்வு செய்தார்.

இந்த வாகனங்களில் ஜி.பி.எஸ். கருவி பொருத்தப்பட்டு இருப்பதால், ரேஷன் கார்டுதாரர்கள், தங்கள் பகுதிக்கு எப்போது வாகனம் வரும் என்பதை மொபைல் செயலி மூலம் தெரிந்து கொள்ளலாம். கலப்படத்துக்கு வழியின்றி, சீல் வைக்கப்பட்ட பைகளில் தரமான அரிசியும், இதர பொருட்களும் வழங்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

ஒவ்வொரு வாகனமும் மாதத்துக்கு குறைந்தபட்சம் 18 நாட்கள் பொருட்களை வினியோகம் செய்யும். இத்திட்டத்தால் அரசுக்கு ஆண்டுக்கு கூடுதலாக ரூ.830 கோடி செலவாகும்.
Tags:    

Similar News