தொழில்நுட்பம்
எல்ஜி வெல்வெட்

எல்ஜி வெல்வெட் ஸ்மார்ட்போன் அறிமுக விவரம்

Published On 2020-04-25 07:43 GMT   |   Update On 2020-04-25 07:43 GMT
எல்ஜி நிறுவனத்தின் வெல்வெட் சீரிஸ் ஸ்மார்ட்போன் அறிமுக விவரங்களை தொடர்ந்து பார்ப்போம்.



எல்ஜி நிறுவனம் தனது வெல்வெட் சீரிஸ் ஸ்மார்ட்போன் மே 7 ஆம் தேதி ஆன்லைன் நிகழ்வு மூலம் கொரியாவில் அறிமுகம் செய்யப்பட இருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இதற்கான அறிவிப்பை எல்ஜி நிறுவனம் 15 விநாடிகள் ஓடும் வீடியோ டீசர் மூலம் தெரியப்படுத்தி இருக்கிறது.

புதிய எல்ஜி வெல்வெட் ஸ்மார்ட்போனில் ஸ்னாப்டிராகன் 765 பிராசஸர், 5ஜி வசதி, வாட்டர் டிராப் நாட்ச், 3டிஆர்க் டிசைன் மற்றும் ரெயின்டிராப் கேமரா வழங்கப்பட இருப்பதை எல்ஜி ஏற்கனவே உறுதிப்படுத்தி இருக்கிறது. 

எல்ஜி வெல்வெட் ஸ்மார்ட்போன் பிரத்யேக வடிவமைப்பு கொண்டிருக்கும் என்றும் இதன் கேமரா சென்சார்கள் ரெயின்டிராப் வகையில் பொருத்தப்படுகிறது. புதிய வெல்வெட் சாதனம் பார்ப்பதற்கும் கையில் வைத்து பயன்படுத்தவும் பிரீமியம் அனுபவத்தை வழங்கும் நோக்கில் உருவாக்கப்பட்டுள்ளது.



இது தோற்றத்தில் மற்ற ஸ்மார்ட்போன்களை விட வித்தியாசமாக இருக்கும். சிறப்பம்சங்களள் தற்போதைய வழக்கத்தையொட்டி  இருக்கும் என கூறப்படுகிறது. தற்சமயம் பெரும்பாலான ஸ்மார்ட்போன் நிறுவனங்கள் ஒரே வடிவமைப்பை தழுவி அதிக மாடல்களை வெளியிடுவதை வாடிக்கையாக கொண்டிருக்கும் நிலையில், எல்ஜி வெல்வெட் முற்றிலும் புதிதாக இருக்கும்.

மொபைல் சாதனங்களில் புதிய பிராண்டிங் பெறும் எல்ஜி நிறுவனத்தின் முதல் சீரிஸ் ஆக எல்ஜி வெல்வெட் இருக்கிறது. மேலும் ஸ்மார்ட்போன்களுக்கு எண் அடிப்படையில் பெயரிடும் வழக்கத்தை மாற்றி பிரபலம் மற்றும் கவர்ச்சிகர பெயர்களை சூட்ட எல்ஜி திட்டமிட்டு இருப்பதாக கூறப்படுகிறது.

புதிய எல்ஜி வெல்வெட் அதிக மென்மையாகவும், பிரீமியம் அனுபவத்தை கொண்டது என்பதை தெரியப்படுத்தும் நோக்கில் சூட்டப்பட்டு இருப்பதாக எல்ஜி தெரிவித்துள்ளது.
Tags:    

Similar News