ஆட்டோமொபைல்

எம்.ஜி. ஹெக்டார் இந்திய வெளியீடு மற்றும் முன்பதிவு விவரங்கள்

Published On 2019-05-02 11:24 GMT   |   Update On 2019-05-02 11:24 GMT
எம்.ஜி. மோட்டார் இந்தியாவின் அதிகம் எதிர்பார்க்கப்படும் எம்.ஜி. ஹெக்டார் காரின் முன்பதிவு மற்றும் வெளியீட்டு விவரங்களை பார்ப்போம். #MGHector



எம்.ஜி. மோட்டார் இந்தியா நிறுவனம் இந்திய சந்தைக்கான ஹெக்டார் எஸ்.யு.வி. மாடலுக்கான உற்பத்தி பணிகளை துவங்கிவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து வெளியாகியிருக்கும் தகவல்களில் எம்.ஜி. ஹெக்டார் எஸ்.யு.வி. மாடலுக்கான அதிகாரப்பூர்வ முன்பதிவுகள் மே 15 ஆம் தேதி துவங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்திய சந்தைக்கென 50 விற்பனையாளர்களை எம்.ஜி. ஹெக்டார் ஏற்கனவே அறிவித்துவிட்டது. முதலில் சில விற்பனை மையங்கள் மே மாத மத்தியில் துவங்க இருப்பதாக தெரிகிறது. எம்.ஜி. விற்பனை மையங்கள் செயல்பட துவங்கியதும் ஹெக்டார் காருக்கான முன்புதிவு துவங்கும் என கூறப்படுகிறது.



எம்.ஜி. மோட்டார்ஸ் தனது ஹெக்டார் எஸ்.யு.வி. காரை இந்தியாவில் ஜூன் மாத வாக்கில் அறிமுகம் செய்யலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. புதிய ஹெக்டார் எஸ்.யு.வி. கார் பல்வேறு வேரியண்ட்களில் கிடைக்கும் என கூறப்படுகிறது. எனினும், இதனை எம்.ஜி. மோட்டார்ஸ் இதுவரை உறுதிப்படுத்தவில்லை.

அனைத்து வேரியண்ட்களும் ஒரு பெட்ரோல் மற்றும் ஒரு டீசல் என்ஜின் ஆப்ஷன்களை கொண்டிருக்கும் என கூறப்படுகிறது. அந்த வகையில் 1.5 லிட்டர் டர்போ பெட்ரோல் என்ஜின் மற்றும் 2.0 லிட்டர் டீசல் என்ஜின் கொண்டிருக்கும் என தெரிகிறது. இரு என்ஜின்களும் 6-ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் உடன் வரும் என கூறப்படுகிறது.

எம்.ஜி. ஹெக்டார் காரில் டூயல் ஹெட்லேம்ப் செட்டப், 360 டிகிரி கேமரா, க்ரூஸ் கண்ட்ரோல், கீ-லெஸ் எண்ட்ரி, டைமண்ட் கட் அலாய் வீல்கள், ஹார்மன் இன்ஃபினிட்டி ஆடியோ சிஸ்டம், புஷ் ஸ்டார்ட் பட்டன் என பல்வேறு அம்சங்கள் வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
Tags:    

Similar News