செய்திகள்
மாஸ்கோ நகரம்

மாஸ்கோவில் கொரோனா கட்டுப்பாடுகள் நீட்டிப்பு -கால்பந்து நேரலை அரங்கங்கள் மூடப்பட்டன

Published On 2021-06-18 10:35 GMT   |   Update On 2021-06-18 10:35 GMT
மாஸ்கோவில் உள்ள சேவை ஊழியர்கள் அனைவரும் கட்டாயம் கொரோனா தடுப்பூசி போட வேண்டும் என மேயர் அலுவலகம் உத்தரவிட்டுள்ளது.
மாஸ்கோ:

ரஷியாவின் மாஸ்கோ நகரில் தினசரி கொரோனா தொற்று எண்ணிக்கை அதிகரித்து வருவதால், கட்டுப்பாடுகள் ஜூன் 29ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இதற்கான அறிவிப்பை மாஸ்கோ மேயர் செர்ஜி சோபியானின் அறிவித்தார். மாஸ்கோ நகரம் இந்த வாரம் புதிய மற்றும் மேலும் வீரியமிக்க கொரோனா வைரஸ் மாறுபாட்டை எதிர்கொள்வதாகவும் மேயர் கூறினார்.

கட்டுப்பாடுகள் நீட்டிக்கப்பட்டிருப்பதால், தேநீர் கடைகள், உணவகங்கள் இரவு நேரத்தில் செயல்பட அனுமதி இல்லை. பொது நிகழ்ச்சிகளில் 1000 நபர்களுக்கு மேல் பங்கேற்க தடை விதிக்கப்படுகிறது. ஐரோப்பிய கால்பந்து சாம்பியன்ஷிப் போட்டிகளை நேரலையாக ஒளிபரப்ப ஏற்பாடு செய்யப்பட்டிருந்த திறந்தவெளி அரங்கங்கள் மூடப்பட்டன. இதனால் ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர். 

மாஸ்கோவில் உள்ள சேவை ஊழியர்கள் அனைவரும் கட்டாயம் தடுப்பூசி போட வேண்டும் என மேயர் அலுவலகம் உத்தரவிட்டிருந்தது. மேலும், இந்த வாரம் வேலை செய்யாத வாரமாகவும் அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
Tags:    

Similar News