ஆன்மிகம்
கொட்டாரம் ராமர் கோவிலில் சிறப்பு வழிபாடு நடந்த போது எடுத்த படம்.

கொட்டாரம் ராமர் கோவிலில் சிறப்பு வழிபாடு

Published On 2020-08-06 04:47 GMT   |   Update On 2020-08-06 04:47 GMT
அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவதற்கான பூமி பூஜையையொட்டி கொட்டாரம் ராமர் கோவிலில் சிறப்பு வழிபாடு நடந்தது.
உத்தரபிரதேசம் மாநிலம் அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவதற்கான பூமி பூஜை நேற்று நடந்தது. இதையொட்டி கன்னியாகுமரி அருகே கொட்டாரம் நந்தவனம் பகுதியில் உள்ள ஸ்ரீராமர்- ஆஞ்சநேயர் கோவிலில் சிறப்பு வழிபாடு நடந்தது. இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள இந்த கோவிலில் நேற்று காலை 8.30 மணி முதல் 9.30 மணி வரை ராமருக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் பூஜைகள் நடத்தப்பட்டது.

இதேபோல் கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவில் அருகே உள்ள விசுவ இந்து பரிஷத்துக்கு சொந்தமான பக்தர்கள் யாத்ரா நிவாசில் சிறப்பு பூஜை மற்றும் வழிபாடு நடத்தப்பட்டது.

அயோத்தியில் ராமர் கோவில் பூமி பூஜை நடந்ததையொட்டி கன்னியாகுமரி விவேகானந்தா கேந்திரத்தில் ஆயுட்கால ஊழியர்கள், பணியாளர்கள் மற்றும் தொண்டர்கள் ராமநாப ஜெபம் செய்தனர். நேற்று காலை 6 மணிக்கு தொடங்கிய இந்த நிகழ்ச்சி இன்று காலை 6 மணி வரை நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் விவேகானந்தா கேந்திரா தலைவர் பாலகிருஷ்ணன், பொதுச்செயலாளர் பானு தாஸ், நிர்வாக செயலாளர் மற்றும் பொருளாளர் அனுமந்தராவ், நிர்வாக அதிகாரி அனந்த ஸ்ரீபத்மநாபன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

அயோத்தியில் ராமர் கோவிலுக்கு நேற்று பூமி பூஜை நடந்தது. இதனை அகஸ்தீஸ்வரம் அருகில் உள்ள ஏழு சாட்டுபத்து ஊர்மக்கள் கொண்டாடினர். கல்லூரி சாலையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் ராமர் படத்திற்கு ஊர் தலைவர் பொன்னம்பலம் மாலை அணிவித்து வணங்கி னார். ராமதாணு லிங்கம் முன்னிலை வகித்தார். தொடர்ந்து ஊர் இளைஞர்கள் ராமர் ஜெயந்தி பாடல்களை பாடினர். தொடர்ந்து ஸ்ரீராமஜெயம் வாசித்தனர். முடிவில் பட்டாசுகள் வெடித்து, அனைவருக்கும் இனிப்புகள் வழங்கப்பட்டது.
Tags:    

Similar News