ஆட்டோமொபைல்
வோக்ஸ்வேகன் விர்டுஸ்

வோக்ஸ்வேகன் விர்டுஸ் வெளியீட்டு விவரம்

Published On 2021-08-20 08:29 GMT   |   Update On 2021-08-20 08:29 GMT
வோக்ஸ்வேகன் நிறுவனம் இந்திய சந்தையில் அடுத்த ஆண்டு இந்த மாடல்களை வெளியிடுவதில் அதிக கவனம் செலுத்த இருக்கிறது.


வோக்ஸ்வேகன் நிறுவனம் 2022 ஆண்டு புத்தம் புதிய செடான் மாடலை அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது. இந்த ஆண்டு துவக்கம் முதலே எஸ்.யு.வி. மாடல்களில் அதிக கவனம் செலுத்தி வரும் வோக்ஸ்வேகன் அடுத்த ஆண்டு விர்டுஸ் பெயரில் புதிய செடான் மாடலை அறிமுகம் செய்ய இருக்கிறது. 

புதிய விர்டுஸ் மாடலின் உற்பத்தி 2022 ஆண்டு துவக்கத்திலும், விற்பனை இரண்டாவது காலாண்டிலும் துவங்க இருக்கிறது. வோக்ஸ்வேகன் விர்டுஸ் மாடலின் பரிசோதனை ஏற்கனவே துவங்கிவிட்டது. இதுவரை வெளியாகி இருக்கும் ஸ்பை படங்களின்படி புதிய செடான் மாடல் தற்போது விற்பனை செய்யப்படும் வென்டோ மாடலை விட அளவில் பெரியதாக இருக்கும் என தெரிகிறது.



புதிய செடான் மாடல் எம்.கியூ.பி. ஏ.ஒ. ஐ.என். பிளாட்பார்மில் உருவாக்கப்படுகிறது. இந்த மாடலில் 1 லிட்டர் டி.எஸ்.ஐ. பெட்ரோல் என்ஜின் வழங்கப்படும் என கூறப்படுகிறது. இத்துடன் மேனுவல் மற்றும் ஆட்டோமேடிக் டிரான்ஸ்மிஷன் ஆப்ஷன்கள் வழங்கப்படுகிறது.

இந்திய சந்தையில் புதிய வோக்ஸ்வேகன் செடான் மாடல் ஹோண்டா சிட்டி, ஹூண்டாய் வெர்னா, மாருதி சுசுகி சியாஸ் மற்றும் விரைவில் வெளியாக இருக்கும் ஸ்கோடா ஸ்லேவியா போன்ற மாடல்களுக்கு போட்டியாக அமைகிறது.

Tags:    

Similar News