செய்திகள்
கால்நடைகள்

கால்நடைகளுக்கு ஈரம் இல்லாத உலர் தீவனம் அளிக்க அறிவுறுத்தல்

Published On 2021-06-09 09:12 GMT   |   Update On 2021-06-09 12:50 GMT
ஈரமான புற்களில் ஆடு, மாடுகளை மேய்ச்சலுக்கு விடக்கூடாது. ஈரமான புல்லின் நுனியில் குடற்புழுக்களை உண்டாக்கக்கூடிய காரணிகள் அதிகளவில் காணப்படும். அசாதாரண சூழல் கண்டறியப்பட்டால் அருகில் உள்ள கால்நடை டாக்டரை அணுக வேண்டும்.
உடுமலை:

தென்மேற்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில் உடுமலை சுற்றுப்பகுதியில் அவ்வப்போது மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக, கால்நடைகளுக்கு தேவையான பசுந்தீவனங்கள் கிடைக்கப்பெற்று வருகின்றன. அதேநேரம், மழைக்காலங்களில் அவற்றை மிகுந்த கவனத்துடன் பராமரிக்க கால்நடை வளர்ப்போர் அறிவுறுத்தப்பட்டுள்ளனர். இதுகுறித்து கால்நடை டாக்டர்கள் கூறியதாவது:-

மழை மற்றும் குளிர்காலங்களில் கால்நடைகளுக்கு எரிசக்தி நிறைந்த உணவு அளிப்பது அவசியம். தரமான ஈரம் இல்லாத உலர் தீவனம் அளிக்க வேண்டும். அடர் தீவனங்களின் ஈரப்பதம் அதிகரித்து பூஞ்சை தாக்குதல் ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே தீவனங்களை ஈரமில்லாத பகுதியில் வைக்க வேண்டும். மழைநீர் தேங்காதவாறு உயரமான பகுதிகளில் கொட்டகை அமைக்க வேண்டும்.

நுரையீரல் பாதிப்பு மற்றும் மூட்டு வீக்கம் போன்ற பாதிப்பில் இருந்து ஆட்டுக்குட்டிகளைப் பாதுகாக்க ஈரம் இல்லாத வைக்கோல் அல்லது சாக்குப்பையை படுக்கையாக பயன்படுத்தலாம்.ஈரமான புற்களில் ஆடு மாடுகளை மேய்ச்சலுக்கு விடக்கூடாது. 

ஈரமான புல்லின் நுனியில் குடற்புழுக்களை உண்டாக்கக்கூடிய காரணிகள் அதிகளவில் காணப்படும். அசாதாரண சூழல் கண்டறியப்பட்டால் அருகில் உள்ள கால்நடை டாக்டரை அணுக வேண்டும். இவ்வாறு, அவர்கள் தெரிவித்தனர்.
Tags:    

Similar News