செய்திகள்
முககவசம்

பாணாவரம் பகுதியில் முககவசம் அணியாதவர்களுக்கு அபராதம்

Published On 2020-11-21 14:19 GMT   |   Update On 2020-11-21 14:19 GMT
காவேரிப்பாக்கத்தை அடுத்த பாணாவரம் பகுதியில் முககவசம் அணியாதவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.
காவேரிப்பாக்கம்:

காவேரிப்பாக்கத்தை அடுத்த பாணாவரம் ஆரம்ப சுகாதார நிலைய வட்டார மருத்துவ அலுவலர் டேவிஸ் ராஜ்குமார் தலைமையில் வட்டார சுகாதார மேற்பார்வையாளர் மோகன்ராஜ், சுகாதார ஆய்வாளர்கள் தமிழ்செல்வன், குமார், ரஞ்சித், கிராம நிர்வாக அலுவலர் முரளிமனோகர், ஊராட்சி செயலர் பிச்சாண்டி மற்றும் காவல் துறையினர் ஆகியோர் கொண்ட குழுவினர் நேற்று பாணாவரம் பஜார் பகுதி, காந்தி சாலை, நெமிலி ரோடு உள்ளிட்ட பல்வேறு இடங்களில் கடைகளில் முககவசம் அணிந்து சமூக இடைவெளி கடைபிடிக்கின்றார்களா என ஆய்வு செய்தனர்.

அப்போது முககவசம் அணியாத 9 நபர்களுக்கு தலா ரூ.200 வீதமும், சமூக இடைவெளியை கடைப்பிடிக்காத 2 கடை உரிமையாளர்களுக்கு தலா ரூ.500 என மொத்தம் ரூ.2,800 அபராதம் விதிக்கப்பட்டது. தொடர்ந்து கொரொனா பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தி துண்டு பிரசுரங்கள் வழங்கினர்.
Tags:    

Similar News