செய்திகள்
பாலிடெக்னிக் கல்லூரிகளுக்கும் சனிக்கிழமை விடுமுறை

பொறியியல், பாலிடெக்னிக் கல்லூரிகளுக்கும் சனிக்கிழமை விடுமுறை

Published On 2021-10-13 14:26 GMT   |   Update On 2021-10-13 14:26 GMT
பொறியியல், பாலிடெக்னிக் கல்லூரிகளுக்கும் வரும் அரசு விடுமுறை நாளான வியாழன், வெள்ளி சேர்த்து சனிக்கிழமை விடுமுறை அறிவித்து உயர்க்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
சென்னை:

ஆயுத பூஜை மற்றும் சரஸ்வதி பூஜை 14 மற்றும் 15ம் தேதி அரசு விடுமுறை வழங்கப்படும் நிலையில் சனிக்கிழமை சேர்த்து பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்க ஆசிரியர் சங்கம் அரசுக்கு கோரிக்கை விடுத்திருந்த நிலையில், அரசு கோரிக்கையை ஏற்று 16-ஆம் தேதி அதாவது சனிக்கிழமை விடுமுறை வழங்கியுள்ளது.



இந்நிலையில் பொறியியல், பாலிடெக்னிக் கல்லூரிகளுக்கும் வரும் அரசு விடுமுறை நாளான வியாழன், வெள்ளி சேர்த்து  சனிக்கிழமை விடுமுறை அறிவித்து உயர்க்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

Tags:    

Similar News