செய்திகள்
கோப்புப் படம்

ரஷ்யாவில் ராணுவ போக்குவரத்து விமான உற்பத்தி பணிகள் தீவிரம்

Published On 2019-08-26 06:58 GMT   |   Update On 2019-08-26 06:58 GMT
ரஷ்யாவில் கனரக ராணுவ போக்குவரத்து விமானத்தை தயாரிக்கும் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன.
மாஸ்கோ:

ரஷ்யாவில் ராணுவ போக்குவரத்து பயன்பாட்டிற்காக, ரஷ்ய ஒருங்கிணைந்த விமான நிறுவனம் மூலம்  Il-76MD-90A வகை விமானங்கள் உற்பத்தி செய்யப்படுகின்றன. இதற்கான பணிகள் ஏவியேசன் எஸ்.பி. நிறுவனத்தில் நடைபெற்று வருகின்றன. தற்போது விமானங்கள் தயாரிக்கும் பணி முழுவீச்சில் நடைபெற்று வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஆரம்பகட்டப் பணிகள் முடிவடைந்த நிலையில், தற்போது நவீன தொழில்நுட்பத்துடன் விமானத்தின் பாகங்களை பொருத்தும் பணிகள் தொடங்கியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. ஆனால் இந்த தகவலை ரஷ்ய ஒருங்கிணைந்த விமான நிறுவனம் இன்னும் உறுதி படுத்தவில்லை.

Il-76MD-90A என்பது ரஷ்யாவின் உலகப் புகழ்பெற்ற Il-76 விமானத்தின் அதி நவீனமயமாக்கப்பட்ட விமானம் ஆகும். இந்த விமானங்கள் முழு டிஜிட்டல் விமானக் கட்டுப்பாட்டு அமைப்பு, PS-90A-76 ரக என்ஜின்கள் மற்றும் மேம்பட்ட எரிபொருள் திறன் அமைப்புகளைக் கொண்டுள்ளன. இந்த விமானம் இராணுவ வீரர்களையும் மற்றும் இராணுவ உபகரணங்கள், எரிபொருட்கள், கொள்கலன்கள் போன்றவற்றை எடுத்துச் செல்லவும், பாதுகாப்பாக தரையிறக்கவும் ஏதுவாக வடிவமைக்கப்பட்டுள்ளது.

4 தினங்களுக்கு முன்பு பாவர் 373 என்ற நீண்ட தூர வகை ஏவுகணை அமைப்பை ஈரான் ராணுவம் அறிமுகப்படுத்தியது. இந்த பாவர்- 373 வகை ஏவுகணை ரஷ்யாவின் எஸ்-300 ரக ஏவுகணைகளை விட சக்தி வாய்ந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
Tags:    

Similar News