செய்திகள்

அருணாசலப்பிரதேசத்தில் பயங்கரவாதிகள் தாக்குதல் - எம்எல்ஏ உள்பட 11 பேர் பலி

Published On 2019-05-21 10:15 GMT   |   Update On 2019-05-21 12:47 GMT
அருணாச்சலப்பிரதேசம் மாநிலத்தில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் என்பிபி கட்சி எம்.எல்.ஏ.வான திரோங் அபோ உள்பட 11 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
இடாநகர்:

அருணாச்சலப்பிரதேசம் மாநிலத்தின் தேசிய மக்கள் கட்சியின் எம்.எல்.ஏ.வாக பதவி வகித்து வந்தவர் திரோங் அபோ.

இந்நிலையில், மேற்கு கோன்சா பகுதியில் உள்ள திரப் மாவட்டத்தில் இன்று பயங்கரவாதிகள் திடீரென தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் என்.பி.பி. கட்சி எம்.எல்.ஏ.வான திரோங் அபோ உள்பட 11 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

இந்த தாக்குதல் சம்பவத்துக்கு மேகாலயா மாநில முதல் மந்திரி கன்ராட் சங்மா கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளார்.

அருணாசலப்பிரதேசத்தில் இதுபோன்ற சம்பவங்கள் நடைபெற்றதில்லை. எம்.எல்.ஏ மீதான தாக்குதல் குறித்து உரிய விசாரணைக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது என மாநில உள்துறை மந்திரி தெரிவித்துள்ளார். 

அருணாசலப்பிரதேசத்தில் நடைபெற்ற சட்டசபை தேர்தலில் மேற்கு கோன்சா பகுதியில் போட்டியிட்டவர் திரோங் அபோ என்பதும், 23ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Tags:    

Similar News