செய்திகள்
கோப்பு படம்

காரியாபட்டி கடம்பன் குளத்தில் ரூ.5½ லட்சம் முறைகேடு - ஊராட்சி செயலாளர் ‘சஸ்பெண்டு’

Published On 2019-11-16 14:34 GMT   |   Update On 2019-11-16 14:34 GMT
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி யூனியனுக்குட்பட்ட கடம்பன் குளத்தில் ரூ.5½ லட்சம் முறைகேடு செய்த ஊராட்சி செயலாளர் ‘சஸ்பெண்டு’ செய்யப்பட்டார்.
விருதுநகர்:

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி யூனியனுக்குட்பட்ட டி.கடம்பன்குளம் பஞ்சாயத்து செயலாளராக இருந்தவர் முத்துசாமி. இவர் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 24-ந் தேதி பணியில் சேர்ந்துள்ளார்.

பணியில் சேர்ந்த 11 மாதங்களில், முத்துச்சாமி, நிதிமுறைகேடு செய்திருப்பதாக புகார்கள் வந்தன. இதனை சரியாக ஆய்வு செய்யவில்லை என துணை வட்டார வளர்ச்சி அலுவலர் முத்துலட்சுமி மீதும் புகார் கூறப்பட்டது.

இதுகுறித்து மாவட்ட நிர்வாகம் உத்தரவின் பேரில், தணிக்கை மேற் கொள்ளப்பட்டது. இதில் ரூ.5 லட்சத்து 34 ஆயிரம் முறைகேடு கண்டு பிடிக்கப்பட்டது.

இதுகுறித்து மாவட்ட கலெக்டருக்கு காரியாபட்டி வட்டார வளர்ச்சி அதி காரி பிரின்ஸ் தகவல் தெரிவித்தார். இதனை தொடர்ந்து ஊராட்சி செயலாளர் முத்துசாமியை பணியிடை நீக்கம் செய்தும், துணை வட்டார வளர்ச்சி அலுவலர் முத்துலட்சுமி மீது துறை ரீதியான நடவடிக்கை மேற்கொள்ளவும், கலெக்டர் சிவஞானம் உத்தரவிட்டார்.
Tags:    

Similar News