செய்திகள்
கோப்புப்படம்

திண்டிவனத்தில் மொபட்டில் சென்ற ஆசிரியையிடம் நகை பறிப்பு

Published On 2021-10-27 05:14 GMT   |   Update On 2021-10-27 05:14 GMT
திண்டிவனம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் தொடர்ந்து கொள்ளை சம்பவங்கள் நடைபெறுவதால் போலீசார் இதனை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
திண்டிவனம்:

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் பகுதியில் உள்ள நேதாஜி நகரை சேர்ந்தவர் லூயிஸ் எடிசன் ராஜ் (வயது50). இவர் சென்னையில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார்.

இவரது மனைவி ஜூலி சுதா (44). இவர் அந்த பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் ஆசிரியராக வேலை பார்த்து வருகிறார்.

நேற்றிரவு ஜூலி சுதா வேலையை முடித்துவட்டு வழக்கம்போல் தனது மொபட்டில் வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார். நேதாஜி நகரில் ஜூலி சுதா சென்றுகொண்டிருந்த போது அந்த வழியே இருசக்கர வாகனத்தில் ஹெல்மெட் மற்றும் முகமூடி அணிந்து வந்த அடையாளம் தெரியாத 2 வாலிபர்கள் மொபட்டில் சென்று கொண்டிருந்த ஜூலி சுதாவின் கழுத்தில் இருந்த 3 லட்சம் ரூபாய் மதிப்புள்ள 6 பவுன் தாலி சங்கிலியை பறித்தனர். இதில் நிலை தடுமாறி கீழே விழுந்த ஜூலி சுதா வலியில் அலறி துடித்தார். ஜூலி சுதாவின் அலறல் சத்தம் கேட்டு பொதுமக்கள் விரைந்து சென்றனர்.

சுதாரித்துக்கொண்ட அந்த 2 வாலிபர்களும் 6 பவுன் தாலி சங்கிலியுடன் அங்கிருந்து தப்பி சென்றனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

திண்டிவனம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் தொடர்ந்து கொள்ளை சம்பவங்கள் நடைபெறுவதால் போலீசார் இதனை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்தப் பகுதி மக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
Tags:    

Similar News