செய்திகள்
கோப்புப்படம்

காசநோய் குறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் - உலக சுகாதார நிறுவன ஆலோசக

Published On 2021-04-13 17:27 GMT   |   Update On 2021-04-13 17:27 GMT
காசநோய் குறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்று உலக சுகாதார நிறுவன ஆலோசகர் அறிவுரை கூறினார்.
விழுப்புரம்:

விழுப்புரம் மாவட்டத்தில் செயல்படுத்தப்பட்டு வரும் காசநோய் தடுப்பு திட்டம் குறித்த ஆய்வுக்கூட்டம் விழுப்புரம் அரசு மருத்துவமனை வளாகத்தில் உள்ள காசநோய் தடுப்புப்பிரிவு கூட்ட அரங்கில் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட காசநோய் தடுப்புத்திட்ட துணை இயக்குனர் சுதாகர் தலைமை தாங்கினார். சிறப்பு அழைப்பாளராக காசநோய் தடுப்பு திட்டத்தின் உலக சுகாதார நிறுவன ஆலோசகரான டாக்டர் டெல்பினா கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார்.

அதன் பின்னர் விழுப்புரம் மாவட்டத்தில் காசநோயாளிகள் எண்ணிக்கை எவ்வளவு, அவர்களுக்கு மருந்து, மாத்திரைகள், மத்திய அரசின் உதவித்தொகை முறையாக வழங்கப்படுகின்றனவா? என கேட்டறிந்தார். தொடர்ந்து, காசநோயாளிகள் முறையாக ஊட்டச்சத்துகளை எடுத்துக்கொள்கின்றனரா? எனவும் அவர் ஆய்வு செய்தார்.

மேலும் மருந்து, மாத்திரைகள் எடுக்காமல் விடுபட்ட காசநோயாளிகள் குறித்த விவரங்களை சேகரித்து அவர்களுக்கு தொடர்ந்து மருந்து, மாத்திரைகள் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். தனியார் மருத்துவமனைகளில் காசநோய்க்கு மருத்துவ சிகிச்சை பெறுபவர்களுக்கும் அரசின் காசநோய் தடுப்பு திட்டத்தின் கீழ் மருந்து, மாத்திரைகள், மத்திய அரசின் உதவித்தொகை கிடைக்கச்செய்ய வேண்டும். வெளியூர்களுக்கு சென்றுள்ள காசநோயாளிகளை கண்டறிந்து மருந்துகளை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். அதேநேரத்தில் காசநோய் குறித்தும், அதனை தடுப்பதற்கான வழிமுறைகள் குறித்தும் பொதுமக்களிடம் போதிய விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்றார்.

இக்கூட்டத்தில் விழுப்புரம் மாவட்டத்தில் பணிபுரியும் தேசிய காசநோய் தடுப்பு பிரிவு மருத்துவர்கள், பணியாளர்கள் கலந்துகொண்டனர்.
Tags:    

Similar News