வழிபாடு
கள்ளழகர் எழுந்தருளும் வாகனங்கள் மதுரை வந்தன

கள்ளழகர் எழுந்தருளும் வாகனங்கள் மதுரை வந்தன

Published On 2022-04-12 06:25 GMT   |   Update On 2022-04-12 06:25 GMT
சித்திரை திருவிழாவுக்கு மகுடம் சூட்டும் விதமாக கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் வைபவத்திற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
சித்திரை திருவிழா என்றாலே மதுரை தான் நினைவுக்கு வரும். மீனாட்சி அம்மன் திருக்கல்யாணம், மீனாட்சி தேரோட்டம், கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் வைபவம் பிரசித்தி பெற்றது. இந்த திருவிழாக்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் கூடுவார்கள். இத்தகைய சிறப்பு பெற்ற சித்திரை திருவிழா மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் நடைபெற்று வருகிறது. இந்த சித்திரை திருவிழாவுக்கு மகுடம் சூட்டும் விதமாக கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் வைபவத்திற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

இந்தநிலையில் அழகர்கோவில் சித்திரை பெருந்திருவிழா இன்று(செவ்வாய்க்கிழமை) மாலையில் தொடங்குகிறது. இதை தொடர்ந்து 14-ந்தேதி மாலையில் கள்ளழகர் தங்கப்பல்லக்கில் மதுரைக்கு புறப்படுகிறார். 16-ந் தேதி காலையில் தங்கக்குதிரை வாகனத்தில் வைகை ஆற்றில் இறங்குகிறார்.

இதையொட்டி நேற்று காலையில் அழகர்கோவிலில் இருந்து 3 வாகனங்களும் தனித்தனியே லாரி போன்ற வாகனம் மூலமாக அனுப்பி வைக்கப்பட்டன.
இதில் வைகையில் இறங்குவதற்காக தங்கக்குதிரை வாகனம் தல்லாகுளம் பெருமாள் கோவிலிலும், வைகை ஆறு தேனூர் மண்டபத்தில் மண்டூக மகரிஷிக்கு சாப விமோசனம் தருவதற்காக கருடவாகனமும், வண்டியூர் வீரராகவ பெருமாள் கோவிலில் சேஷ வாகனமும் கொண்டு வரப்பட்டு உள்ளன. இந்த 3 வாகனங்களும் மதுரை சித்திரை திருவிழா காலங்களில் மட்டும் பயன்படுத்தப்படும். அதன்பிறகு மீண்டும் அழகர்கோவிலுக்கு திரும்ப கொண்டு செல்லப்படும்.
Tags:    

Similar News