செய்திகள்

மூன்று கோப்பைகள் வென்றும் விருது பட்டியலில் பெயர் இல்லையே- கிரிஸ்மான் ஆதங்கம்

Published On 2018-09-05 16:12 GMT   |   Update On 2018-09-05 16:12 GMT
உலகக்கோப்பை உள்பட மூன்று டிராபிகளை கைப்பற்றிய பின்னரும் பதக்க பிபா விருது பட்டியலில் இடம் கிடைக்கவில்லை என கிரிஸ்மான் கவலை தெரிவித்துள்ளார்.
பிரான்ஸ் கால்பந்து அணியின் முன்னணி வீரர் கிரிஸ்மான். இவர் கடந்த 2016-ம் ஆண்டு பிபாவின் சிறந்த வீரருக்கான கடைசி 3 பேர் பட்டியலில் இடமபிடித்திருந்தார். இதில் கிறிஸ்டியானோ ரொனால்டோ விருதை தட்டிச் சென்றார். மெஸ்சி 2-வது இடம் பிடித்தார். கிரிஸ்மானுக்கு 3-வது இடமே கிடைத்தது.

அப்போது கிரிஸ்மான் விளையாடிய அணி எந்தவித கோப்பைகளையும் கைப்பற்றவில்லை. யூரோ 2016 தொடரில் பிரான்ஸ் இறுதிப் போட்டியில் தோல்வியடைந்தது. அதன்பின் சாம்பியன்ஸ் லீக் இறுதிப் போட்டியில் அட்லெடிகோ மாட்ரிட் அணி தோல்வியை சந்தித்தது.

தற்போது கிரிஸ்மான் இடம் பிடித்துள்ள அணி மூன்று கோப்பைகளை கைப்பற்றியுள்ளது. ரஷியாவில் நடைபெற்ற உலகக்கோப்பையை பிரான்ஸ் அணி கைப்பற்றியுள்ளது. அட்லெடிகோ மாட்ரிட் யூரோப்பா லீக், யுஇஎஃப்ஏ சூப்பர் கோப்பையை கைப்பற்றியுள்ளது.



ஆனால் இந்த வருடத்திற்கான பிபா விருதிற்கான கடைசி மூன்று பேர் பட்டியலில் ரொனால்டோ, லூகா மோட்ரிச், முகமது சாலா ஆகியோர் பெயர்கள் மட்டுமே இடம்பிடித்துள்ளது. இதனால் கிரிஸ்மான் கவலையடைந்துள்ளார்.

ஒரு கோப்பையையும் வாங்காத போது இறுதிப் பட்டியலில் பெயர் இருந்தது. தற்போது மூன்று கோப்பைகளையும் வென்ற பிறகு தனது இடம் இல்லையே என்று தனது அதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார்.
Tags:    

Similar News