வழிபாடு
பழனி மாரியம்மன் கோவிலில் மாசித்திருவிழா முகூர்த்தகால் நடப்பட்டது

பழனி மாரியம்மன் கோவிலில் மாசித்திருவிழா முகூர்த்தகால் நடப்பட்டது

Published On 2022-01-29 05:31 GMT   |   Update On 2022-01-29 05:31 GMT
பழனி கிழக்கு ரதவீதியில் பிரசித்தி பெற்ற மாரியம்மன் கோவிலில் மாசித்திருவிழாவை முன்னிட்டு கோவில் நுழைவு வாயில் முன்பு முகூர்த்தகால் நடப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது.
பழனி கிழக்கு ரதவீதியில் பிரசித்தி பெற்ற மாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் மாரியம்மன் லிங்க வடிவில் பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். பழனி முருகன் கோவிலின் உபகோவிலாக உள்ள இக்கோவிலில் ஆண்டுதோறும் மாசித்திருவிழா சிறப்பாக கொண்டாடப்படும். அதன்படி இந்த ஆண்டுக்கான திருவிழா நேற்று முகூர்த்தகால் நடுதலுடன் தொடங்கியது. இதையொட்டி நேற்று மாரியம்மன் கோவில் சன்னதியில் முகூர்த்தகாலுக்கு சிறப்பு பூஜை நடைபெற்றது. இதை காண கோவில் நுழைவு வாயிலில் மாரியம்மன் எழுந்தருளினார்.

பின்னர் கோவில் நுழைவு வாயில் முன்பு முகூர்த்தகால் நடப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது. இந்நிகழ்ச்சியில் கோவில் கண்காணிப்பாளர் முருகேசன் மற்றும் அலுவலர்கள் கலந்துகொண்டனர். விழாவையொட்டி வருகிற 1-ந்தேதி கம்பம் சாட்டுதல், 8-ந் தேதி கொடியேற்றம், கம்பத்தில் பூவோடு வைத்தல், 15-ந்தேதி திருக்கல்யாணம், 16-ந்தேதி தேரோட்டம் நடக்கிறது. விழா ஏற்பாடுகளை கோவில் அலுவலர்கள் செய்து வருகின்றனர்.
Tags:    

Similar News