செய்திகள்
ஐ.டி.சி கிராண்ட் சோழா ஹோட்டல், சென்னை

சீன அதிபருக்கு எதிராக முழக்கமிட்ட திபெத்தியர்கள் 5 பேர் கைது

Published On 2019-10-11 06:32 GMT   |   Update On 2019-10-11 06:32 GMT
சென்னை வரும் சீன அதிபர் ஜின்பின்கின் வருகைக்கு எதிராக முழக்கமிட்ட 5 திபெத்தியர்களை காவல் துறை கைது செய்தது.
சென்னை:

இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கும், சீன அதிபர் ஜி ஜின்பிங்கிற்கும் இடையிலான முறைசாரா சந்திப்பு கடந்த ஆண்டு சீனாவின் வுஹான் பகுதியில் நடந்தது. அதைத்தொடர்ந்து, இரண்டாவது முறைசாரா சந்திப்பு சென்னை அருகே உள்ள கடலோர நகரமான மாமல்லபுரத்தில் இன்றும் நாளையும் நடைபெற உள்ளது.

இந்த சந்திப்புக்காக சீனாவில் இருந்து புறப்பட்ட அதிபர் ஜி ஜின்பிங் இன்று மதியம் சென்னை வந்து சேருகிறார். சென்னை விமான நிலையத்தில் அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்படுகிறது. இந்த வரவேற்பைத் தொடர்ந்து சீன அதிபர்  ஜி ஜின்பிங் கிண்டியில் உள்ள ஐடிசி கிராண்ட் சோழா நட்சத்திர விடுதிக்கு செல்கிறார்.

இந்நிலையில், சீன அதிபர் தங்க உள்ள கிண்டி ஐ.டி.சி கிராண்ட் சோழா ஹோட்டல் அருகே அதிபர் ஜின்பின்கிற்கு எதிராக முழக்கமிட்ட 3 பெண்கள் உள்பட 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். பலத்த பாதுகாப்பையும் மீறி ஹோட்டல் அருகே போராட்டம் நடந்ததால் அங்கு சற்று பரபரப்பு ஏற்பட்டது. இது தொடர்பாக காவல்துறை விசாரணை மேற்கொண்டு வருகிறது.
Tags:    

Similar News