செய்திகள்
அரவிந்த் கெஜ்ரிவால்

டெல்லியில் மேலும் ஒரு வாரத்துக்கு ஊரடங்கு நீட்டிப்பு : முதல்-மந்திரி கெஜ்ரிவால் அறிவிப்பு

Published On 2021-05-23 21:29 GMT   |   Update On 2021-05-23 21:29 GMT
கொரோனா தொற்று எண்ணிக்கை குறைந்தால், மே 31-ந் தேதி முதல் கட்டம் கட்டமாக ஊரடங்கு ரத்து செய்யப்படும் என்று முதல்-மந்திரி கெஜ்ரிவால் கூறியுள்ளார்.
புதுடெல்லி:

கொரோனா 2-வது அலையின் உச்சத்தைக் கண்ட தலைநகர் டெல்லியில் தற்போது அதன் தாக்கம் மெல்ல மெல்லத் தணிந்து வருகிறது.

இந்நிலையில், டெல்லியில் ஊரடங்கு மேலும் ஒரு வாரத்துக்கு நீட்டிக்கப்படுவதாக முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் நேற்று அறிவித்தார். கொரோனா தொற்று எண்ணிக்கை குறைந்தால், மே 31-ந் தேதி முதல் கட்டம் கட்டமாக ஊரடங்கு ரத்து செய்யப்படும் என்று அவர் கூறினார்.



‘ஊரடங்கு தொடர்பாக நான் பலருடன் ஆலோசித்தேன். அதை மேலும் ஒரு வாரத்துக்கு நீட்டிப்பதற்கு ஆதரவாகவே பொதுக்கருத்து இருந்தது. எனவே மே 31-ந் தேதி காலை 5 மணி வரை ஊரடங்கை நீட்டிப்பது என்று டெல்லி அரசு முடிவு செய்துள்ளது. கடும் போராட்டத்துக்குப் பின் பெறப்பட்ட பலன்களை இழந்துவிடாமல் இருக்க இந்த ஊரடங்கு அவசியம். என்றும் அரவிந்த் கெஜ்ரிவால் கூறினார்.
Tags:    

Similar News