தொழில்நுட்பச் செய்திகள்
ஆண்ட்ராய்டு 12L

வாய்ஸ் அழைப்புகளில் பேசுவதையும் இனி திரையில் வார்த்தைகளாக காண முடியும்!- கூகுளின் புதிய அப்டேட்

Published On 2022-03-10 06:40 GMT   |   Update On 2022-03-10 06:40 GMT
தற்போது பிக்ஸல் போன்களுக்கு மட்டுமே வெளியாகியுள்ள இந்த அப்டேட் விரைவில் மற்ற ஆண்ட்ராய்டு போன்களுக்கும் வரும் என கூறப்படுகிறது.
கூகுள் நிறுவனம் தனது ஆண்ட்ராய்டு 12L அப்டேட்டை வெளியிட்டுள்ளது. இதில் பல முக்கிய அம்சங்கள் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த ஆண்ட்ராய்டு 12L அப்டேட் பழைய Pixel 3a முதல் Pixel 5a வரையிலான ஸ்மார்ட்போன்களுக்கு முதற்கட்டமாக வழங்கப்பட்டுள்ளது. ஏப்ரல் மாத தொடக்கத்தில் பிற பிக்சல் போன்களுக்கும் புதிய அப்டேட் கிடைக்கும் என கூகுள் அறிவித்துள்ளது. 

இந்த புதிய அப்டேட்டின் சிறப்பம்சமாக வாய்ஸ் அழைப்புகளுக்கு நேரடி கேப்ஷன் வழங்கப்படுகிறது. இதற்கு முன் வீடியோக்களுக்கு மட்டுமே நேரடி கேப்ஷன்கள் வழங்கப்பட்டு வந்தன. 

இந்நிலையில் தற்போது வெளியிட்டுள்ள புதிய அம்சத்தின் மூலம், வாய்ஸ் அழைப்புகளில் மற்றவர்கள் என்ன பேசுகின்றனர் என்பதையும் நாம் திரையில் வார்த்தைகளாக காணலாம்.  காது கேளாதோருக்கு இந்த அம்சம் மிகவும் உதவியாக இருக்கும் என்று கூகுள் தெரிவித்துள்ளது.



புதிய பேட்டரி விட்ஜெட்டும் இந்த அப்டேட்டில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் பேட்டரி திறன், எவ்வளவு நேரம் தாக்குப்பிடிக்கும் போன்ற தகவல்கள் இந்த விட்ஜெட்டில் காட்டப்படும்.

தற்போது பிக்ஸல் போன்களுக்கு மட்டுமே வெளியாகியுள்ள இந்த அப்டேட் விரைவில் மற்ற ஆண்ட்ராய்டு போன்களுக்கும் வரும் என கூறப்படுகிறது.
Tags:    

Similar News