உள்ளூர் செய்திகள்
தருவை மைதானத்தில் கலெக்டர் செந்தில்ராஜ் போலீசாரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்று கொண்ட காட்சி.

தூத்துக்குடியில் குடியரசு தினவிழாவில் கலெக்டர் தேசிய கொடியேற்றினார்

Published On 2022-01-26 09:59 GMT   |   Update On 2022-01-26 09:59 GMT
தூத்துக்குடி மாவட்ட நிர்வாகம் சார்பில் குடியரசு தினவிழா தருவை மைதானத்தில் இன்று நடைபெற்றது. மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் தேசிய கொடியை ஏற்றி வைத்து போலீசார் அணிவகுப்பு மரியாதையை ஏற்று கொண்டார்.
தூத்துக்குடி:

தூத்துக்குடி மாவட்ட நிர்வாகம் சார்பில் குடியரசு தினவிழா தருவை மைதானத்தில் இன்று நடைபெற்றது.

மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் தேசிய கொடியை ஏற்றி வைத்து போலீசார் அணிவகுப்பு மரியாதையை ஏற்று கொண்டார்.

தொடர்ந்து  காவல்துறை யில் 46 பேருக்கு நற்சான்றிதழ் களை வழஙகினார்.

இதே போல்  தீயணைப்பு மற்றும் மீட்பு துறை, வருவாய் துறை, மாவட்ட தேர்தல் பிரிவு, ஊரக வளர்ச்சி, மருத்துவம், வேளாண்மை, கூட்டுறவு துறை, மாவட்ட தொழில் மையம், பள்ளி& கல்விதுறை, மாவட்ட விளையாட்டு, மாற்றுத் திறனாளிகள் நல அலுவலகம், தொழிலாளர் நலத்துறை, முதல்& அமைச்சரின் மருத்துவ காப்பீடு திட்டத் துறை, கால்நடை பராமரிப்பு துறை உள்ளிட்ட 24 துறை களை சேர்ந்த அரசு அலுவலர்களுக்கு கலெக்டர் செந்தில் ராஜ் நற்சான்றி தழ்களை வழங்கினார்.

பின்னர் மகளிர் திட்டம், பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் அலுவலகம், வருவாய்துறை உள்ளிட்ட துறைகளை சேர்ந்த 95 பயனாளிகளுக்கு ரூ.51 லட்சத்து 42 ஆயிரத்து 453 மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகள் வழங்கினர்.

விழாவில் மாவட்ட வருவாய் அலுவலர் கண்ண பிரான், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார், திட்ட இயக்குனர் சரவணன் மற்றும் பல்வேறு அரசு அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
Tags:    

Similar News