செய்திகள்
பேருந்துகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள காட்சி

ஆர்எஸ்எஸ் தொண்டர் கொலை- கேரளாவின் ஆலப்புழா மாவட்டத்தில் முழு அடைப்பு

Published On 2021-02-25 08:36 GMT   |   Update On 2021-02-25 08:36 GMT
ஆர்எஸ்எஸ் தொண்டர் கொலை செய்யப்பட்டதைக் கண்டித்து கேரளாவின் ஆலப்புழா மாவட்டத்தில் முழு அடைப்பு போராட்டம் நடைபெறுகிறது.
ஆலப்புழா:

கேரள மாநிலம் ஆலப்புழா மாவட்டத்தில் எஸ்டிபிஐ கட்சியினருக்கும் ஆர்எஸ்எஸ் அமைப்பினருக்கும் இடையே நேற்று இரவு மோதல் ஏற்பட்டது. அப்போது ஆர்எஸ்எஸ் தொண்டர் நந்து (வயது 23) வெட்டிக் கொல்லப்பட்டார். 

இந்த கொலையைக் கண்டித்தும் குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும், ஆலப்புழா மாவட்டத்தில் பாஜக மற்றும் இந்து அமைப்புகள் சார்பில் இன்று முழு அடைப்பு போராட்டம் நடைபெறுகிறது. காலை 6 மணிக்கு முழு அடைப்பு போராட்டம் தொடங்கியது. 

சேர்தலா உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கடைகள் அடைக்கப்பட்டு வெறிச்சோடி காணப்படுகின்றன. பேருந்துகள் இயக்கப்படவில்லை. மாலை 6 மணி  வரை போராட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையே ஆர்எஸ்எஸ் தொண்டர் கொலை தொடர்பாக 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
Tags:    

Similar News