செய்திகள்
திருப்பூரில் கண்காணிப்பு கோபுரம் அமைக்கப்படும் காட்சி.

தீபாவளி திருட்டை தடுக்க திருப்பூரின் முக்கிய பகுதிகளில் உயர் கோபுரம் அமைத்து கண்காணிப்பு - போலீசார் அதிரடி நடவடிக்கை

Published On 2021-10-15 10:05 GMT   |   Update On 2021-10-15 10:05 GMT
கோபுரத்தின் உள்ளே இருந்தபடி தொலை நோக்கிகள் மூலம் மக்களின் நகர்வுகளை போலீசார் கண்காணிப்பார்கள்.
திருப்பூர்:

வருகிற நவம்பர் 4-ந்தேதி தீபாவளி கொண்டாடப்படுகிறது. திருப்பூரில் பண்டிகைக் கால நெரிசலை பயன்படுத்தி, சமூகவிரோதிகள் ஜேப்படி,செயின் பறிப்பு போன்ற குற்ற செயல்களில் ஈடுபட வாய்ப்பு உள்ளது.

இவற்றை தடுக்க பண்டிகை காலங்களில் உயர் கோபுரம் அமைத்து போலீசார் கண்காணிப்பு பணிகளில் ஈடுபடுவர். தீபாவளி நெருங்குவதையடுத்து தற்போது, திருப்பூர் மாநகரில் முக்கிய பகுதிகளான குமரன் ரோடு, மாநகராட்சி அலுவலகம், தற்காலிக பஸ் நிலையம், பழைய பஸ் நிலையம் உள்ளிட்ட பகுதிகளில் போலீசார் உயர் கோபுரங்கள் அமைத்து வருகின்றனர். 

விழாக்கால ஆடை ரகங்கள் வாங்குவது, வீட்டு உபயோக பொருட்கள் வாங்குவதற்காக மக்கள் வந்து செல்லும் முக்கியமான பகுதிகள், யுனிவெர்சல் தியேட்டர் ரோடு, தற்காலிக பஸ் நிலைய பகுதிகளில் 20 அடி உயரத்துக்கு கண்காணிப்பு கோபுரம் அமைக்கப்பட்டு வருகிறது. கோபுரத்தின் உள்ளே இருந்தபடி தொலை நோக்கிகள் மூலம் மக்களின் நகர்வுகளை போலீசார் கண்காணிப்பார்கள்.
Tags:    

Similar News