லைஃப்ஸ்டைல்
குழந்தைக்கு கழிவறை பயிற்சி

1-3 வயது வரையிலான குழந்தை வளர்ப்பு

Published On 2019-06-28 06:17 GMT   |   Update On 2019-06-28 06:17 GMT
குழந்தைகள் பிறந்தது முதல் 3 வயது வரை, குழந்தைகளை வளர்ப்பதில் செய்ய வேண்டியது என்ன, செய்யக்கூடாதது என்ன என்பது பற்றி அறிந்து கொள்ளலாம்.
குழந்தை வளர்ப்பை மிக மிக எளிதாகக் கடந்து போய், செயற்கரிய செயல்கள் புரிந்து சாதனை படைத்தார்கள், முந்தைய தலைமுறை அன்னைகள்; ஆனால், இன்றைய கால அம்மாக்களுக்கு, குழந்தையை எப்படிக் குளிப்பாட்டுவது என்பதில் இருந்து, அவர்கள் அழாமல், சோறூட்டுவது வரை என அனைத்திலும் மிகப்பெரிய தடுமாற்றங்கள். இதற்கு என்ன காரணம்? இதனை சரிசெய்ய என்ன செய்ய வேண்டும், குழந்தைகள் அழாமல் எப்படிச் சமாளிக்க வேண்டும் என்று அன்னையர் மனதில் பல கேள்விகள்..! குழந்தைகள் பிறந்தது முதல் 3 வயது வரை, குழந்தைகளை வளர்ப்பதில் செய்ய வேண்டியது என்ன, செய்யக்கூடாதது என்ன என்பது பற்றி அறிந்து கொள்ளலாம்.

குழந்தைகள் பிறந்தது முதல் 6 மாதம் வரை, அவர்களுக்கு தாய்ப்பால் மிக மிக அவசியம்; இக்காலகட்டத்தில் குழந்தைகளுக்கு தாய்ப்பால் மட்டுமே போதுமானது, தண்ணீர் கூட தேவையேயில்லை. குழந்தைகளின் மூளை வளர்ச்சியில் முதல் நோய் எதிர்ப்பு சக்தி வரை, சக்தியான, அதிராத அடித்தளம் அமைப்பது தாய்ப்பாலே!

பிறந்த குழந்தைக்கு பவுடர், லோஷன் போன்ற பொருட்கள் தேவையில்லை; அவர்களுக்கு மிருதுவான பருத்தித்துணிகள் அணிவிப்பதே போதுமானது. 6 மாதங்களுக்குப்பின், தாய்ப்பாலுடன் கூடிய இணை உணவுகளை குழந்தைகளுக்கு கொடுக்கலாம்; ஆனால், அது வீட்டில் சுத்தம் கூடிய சுகாதாரமான முறையில் தயாரிக்கப்பட்டதாக இருக்க வேண்டும்.

குழந்தைகள் என்ன வயதினர் ஆயினும், அவர்களுக்கு இரவில் மற்றும் வெளியில் செல்கையில் மட்டும் டையப்பர் பயன்படுத்தலாம்; பகலில் டயப்பர் உபயோகிக்காமல் இருந்தால், அது குழந்தைகளுக்கு மிகவும் நல்லது. டையப்பரால், குழந்தைகளின் நடை மற்றும் தவழ்தல் போன்ற செயல்கள் தடைபடலாம்; தாமதமாகலாம். மேலும் டையப்பர் ஈரத்தினால், உண்டாகும் தடுப்புகள், புண்கள், அரிப்பு போன்ற பிரச்சனைகளையும் தவிர்க்கலாம்.



குழந்தைகளுக்கான தடுப்பூசிகளை மறக்காமல், தவறாமல் போடுவதுடன், குழந்தையின் நோயுற்ற சமயங்களில், மருத்துவர் கொடுத்த மருந்துச் சீட்டுகள், பரிசோதனை முடிவுகள் போன்றவற்றை ஒரு கோப்பு போன்று பராமரித்துவர வேண்டும்.

குழந்தை ஏலெட்டு மாதத்தில் ‘தாத்தா’, ‘ப்பா’ என பேச ஆரம்பிக்கையில், அச்சமயம் அவர்களுடன் பெற்றோர்கள், வீட்டிலுள்ளோர் அதிகம் பேச வேண்டும். இது தான் குழந்தைகளைப் பேச வைப்பதற்கான முதல்முழு படி.

குழந்தையின் 7 மாதத்துக்குப் பின்னர், ‘டாய்லெட் டிரெய்னிங்’ பயிற்சியை அவர்க்ளுக்கு அளித்து, குழந்தைகளின் 2 வயதுக்குள் ‘கக்கா வருது’ என குழந்தைகள் பெற்றோர்களிடம் தெரிவிக்கும் முறையில், அவர்களை பழக்கிவிட வேண்டும்.

ஓடி விளையாடுவது, எழுத்துகள் மற்றும் எண்களை விளையாட்டாகச் சொல்லிக்கொடுப்பது என்று குழந்தைகளின் மூளைக்கும், உடலுக்கும் ஏற்ற மற்றும் பிடித்த வகையில் கற்றுக்கொடுத்து, அவர்களே செய்யும் வண்ணம் வேலை கொடுக்க வேண்டும். 2 வயதில் நீங்கள் உண்ணும் எல்லா வகை உணவுகளையும் குழந்தையும் உண்ணும் வகையில் அவர்களை பழக்க வேண்டும்.

1 வயதுக்குட்பட்ட குழந்தைகளை தினம் 2 முறை உடலுக்கும், 2 நாட்களுக்கு ஒரு முறை தலைக்கும் குளிக்க வைக்க வேண்டும்; வீட்டினுள்ளேயே குழந்தைகளைப் பூட்டி வைக்காமல், அக்கம் பக்கத்து வீட்டுக் குழந்தைகளுடனும், குடியிருப்பின் விளையாட்டுப்பூங்கா போன்றவற்றிலும் அவர்களை விளையாட அனுமதித்து, ‘சோஷியல் பிஹேவியர்’ எனும் சமூக நடத்தை அப்போது தான் குழந்தைகளில் தோன்றி, அவர்களும் இச்சமூகத்திற்கு ஏற்ற மனிதனாய் மாறுவார்கள்..!
Tags:    

Similar News