ஆட்டோமொபைல்
ஒகினவா ஆர்30

இந்தியாவில் ஒகினவா ஆர்30 எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் அறிமுகம்

Published On 2020-08-22 08:43 GMT   |   Update On 2020-08-22 08:43 GMT
ஒகினவா நிறுவனத்தின் புதிய ஆர்30 எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மாடல் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது.
 

எலெக்ட்ரிக் இருசக்கர வாகன உற்பத்தியாளரான ஒகினவா இந்தியாவில் ஆர்30 இ-ஸ்கூட்டர் மாடலை அறிமுகம் செய்து உள்ளது. இந்தியாவில் புதிய ஒகினவா ஆர்30 ஸ்கூட்டர் விலை ரூ. 58,992, எக்ஸ்-ஷோரூம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இதற்கான முன்பதிவும் துவங்கியுள்ளது. முன்பதிவு கட்டணம் ரூ. 2 ஆயிரம் என நிர்ணயிக்கப்பட்டு இருக்கிறது.

ஒகினவா ஆர்30 எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் லோ-ஸ்பீடு பிரிவில் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. இந்த ஸ்கூட்டர் மணிக்கு அதிகபட்சமாக 25 கிலோமீட்டர் வேகத்தில் செல்லும் திறன் கொண்டது ஆகும். இதில் 1.25kWh லித்தியம் அயன் பேட்டரி வழங்கப்படுகிறது. 



இந்த பேட்டரியை ஒருமுறை சார்ஜ் செய்தால் 60 கிலோமீட்டர் வரை செல்லும் திறன் கொண்டது ஆகும். மேலும் இதனை முழுமையாக சார்ஜ் செய்ய நான்கு முதல் ஐந்து மணி நேரங்கள் ஆகும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. இந்த இ ஸ்கூட்டருடன் வரும் மைக்ரோ சார்ஜர் ஆட்டோ கட் அம்சம் கொண்டது ஆகும்.

இந்த ஸ்கூட்டரின் பேட்டரி மூன்று ஆண்டுகள் வாரண்டியுடன் வழங்கப்படுகிறது. இத்துடன் 250 வாட் பிஎல்டிசி மோட்டாருக்கும் மூன்று ஆண்டுகள் / 30 ஆயிரம் கிலோமீட்டர் வாரண்டி வழங்கப்படுகிறது. ஒகினவா ஆர்30 ஸ்கூட்டர் கிளாஸி ரெட், மெட்டாலிக் ஆரஞ்சு, பியல் வைட், சீ கிரீன் மற்றும் சன்ரைஸ் எல்லோ என ஐந்து நிறங்களில் கிடைக்கிறது.
Tags:    

Similar News