தொழில்நுட்பம்
ஹானர் மேஜிக்புக்

ரைசன் 4000 சீரிஸ் சிபியு கொண்ட மேஜிக்புக் லேப்டாப் அறிமுகம்

Published On 2020-07-17 05:24 GMT   |   Update On 2020-07-17 05:24 GMT
ஹானர் பிராண்டின் புதிய மேஜிக்புக் 14, மேஜிக்புக் 15 மற்றும் மேஜிக்புக் ப்ரோ லேப்டாப்கள் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது.

ஹூவாயின் ஹானர் மேஜிக்புக் 14, 15 மற்றும் ப்ரோ மாடல்கள் சீன சந்தையில் அறிமுகம் செய்துள்ளது. புதிய லேப்டாப்களில் ரைசன் 4000 சீரிஸ் சிபியுக்கள் வழங்கப்பட்டுள்ளன.

மேஜிக்புக் ப்ரோ ரைசன் எடிஷன் மாடலில் டூயல் ஃபேன் மற்றும் டூயல் ஹீட் பைப் ஷார்க் ஃபின் ஃபேன் வழங்கப்பட்டுள்ளது. மேஜிக்புக் 14 மாடலில் முழுமையான மெட்டல் வடிவமைப்பு, சீ வேவ் வடிவத்தில் மிக குறைந்த எடை கொண்டிருக்கிறது. இத்துடன் கைரேகை சென்சார் பட்டன் வழங்கப்பட்டுள்ளது.



ஹானர் மேஜிக்புக் 12 / 15 / ப்ரோ சிறப்பம்சங்கள்

- 14 இன்ச் / 15.6 இன்ச் / 16.1 இன்ச் 1920x1080 பிக்சல் 16:9 டிஸ்ப்ளே
- 3.0GHz ஏஎம்டி ரைசன் 7 4800H மொபைல் பிராசஸர்
- ரேடியான் கிராஃபிக்ஸ்
- 16 ஜிபி 2666MHz DDR4 டூயல் சேனல் ரேம்
- 512 ஜிபி எஸ்எஸ்டி
- விண்டோஸ் 10
- 3.5 எம்எம் ஆடியோ ஜாக், கைரேகை சென்சார் பட்டன்
- பாப்-அப் வெப்கேமரா
- மேஜிக்லிண்க் 2.0
- வைபை 802.11 ac, ப்ளூடூத் 5.0
- யுஎஸ்பி டைப்-சி x 1, ஹெச்டிஎம்ஐ x 1, யுஎஸ்பி3.0 (டைப் ஏ) x 1, யுஎஸ்பி2.0 (டைப் ஏ) x 1
- மேஜிக்புக் 14 மற்றும் ப்ரோ – 56Wh பேட்டரி
- மேஜிக்புக் 15 – 42Wh பேட்டரி

புதிய ஹானர் மேஜிக்புக் லேப்டாப் சீரிஸ் துவக்க மாடல் விலை 3999 யுவான் இந்திய மதிப்பில் ரூ. 43010 என துவங்குகிறது. டாப் எண்ட் ஹானர் மேஜிக்புக் ப்ரோ மாடல் விலை 5199 யுவான் இந்திய மதிப்பில் ரூ. 55915 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.
Tags:    

Similar News