செய்திகள்
ஏ.பி.மிஸ்ரா

பி.எப்.பணம் ரூ.2600 கோடி முறைகேடு - உ.பி. மின்சார உற்பத்தி நிறுவன முன்னாள் மேலாளர் கைது

Published On 2019-11-05 08:42 GMT   |   Update On 2019-11-05 08:42 GMT
உத்தர பிரதேசம் அரசின் மின்சார உற்பத்தி நிறுவனத்தின் தொழிலாளர்கள் வருங்கால வைப்பு நிதி தொகையான ரூ.2600 கோடியை தனியார் நிறுவனத்தில் முதலீடு செய்த 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
லக்னோ:

உத்தர பிரதேசம் அரசின் மின்சார உற்பத்தி நிறுவனத்தில் ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் பனியாற்றி வருகின்றனர்.

இவர்களின் மாதாந்திர சம்பளத்தில் இருந்து 12 சதவீதம் தொகை பிடித்தம் செய்யப்பட்டு தொழிலாளர் வருங்கால வைப்பு நிதியில் செலுத்தப்பட்டு வந்தது. அதற்கு நிகரான தொகையை அந்நிறுவனமும் செலுத்தி வந்தாக வேண்டும்.

இந்நிலையில், தொழிலாளர் வருங்கால வைப்பு நிதியில் செலுத்த வேண்டிய பணத்தை தேவான் ஹவுசிங் கார்ப்பரேஷன் என்ற தனியார் நிறுவனத்தின் பங்குகளில் கடந்த 2017-ம் ஆண்டில் இருந்து முதலீடு செய்து வந்ததாக சமீபத்தில் குற்றச்சாட்டுகள் எழுந்தன.

தொழிலாளர்களின் பணம் சுமார் 2600 கோடி ரூபாயை தனியார் நிறுவனத்தில் முதலீடு இந்த முறைகேடுக்கு உத்தர பிரதேசம் முதல் மந்திரி யோகி ஆதித்யாநாத் மற்றும் மின்சாரத்துறை மந்திரி ஸ்ரீகாந்த் சர்மா ஆகியோர் பொறுப்பேற்பக வேண்டும் என முன்னாள் முதல் மந்திரி அகிலேஷ் யாதவ் மற்றும் உ.பி. மாநில காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி ஆகியோர் தெரிவித்தனர்.



இந்த விவகாரம் தலைதூக்க ஆரம்பித்த பின்னர் உ.பி.அரசு நடவடிக்கையில் இறங்கியது. ரூ2600 கோடி ஊழல் செய்ததாக உத்தர பிரதேசம் மாநில மின்சார வாரிய தொழிலாளர்கள் அறக்கட்டளை மற்றும் வைப்பு நிதி அறக்கட்டளையின் முன்னாள் செயலாளர் பிரவீன் குமார் குப்தா மற்றும் உத்தர பிரதேசம் மாநில மின்சார உற்பத்தி நிறுவன நிதித்துறையின் முன்னாள் இயக்குநர் சுதன்ஷு திவேதி ஆகியோர் மீது ஹஸ்ரத்கஞ்ச் காவல் நிலையத்தில் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டு அவர்கள் இருவரும் கைது செய்யப்பட்டனர்.

இந்த முறைகேடு தொடர்பாக சி.பி.ஐ. மற்றும் பொருளாதார அமலாக்கத்துறையின் விசாரணைக்கு முதல் மந்திரி யோகி ஆதித்யாநாத் உத்தரவிட்டுள்ள நிலையில் உத்தர பிரதேசம் மாநில மின்சார உற்பத்தி நிறுவனத்தின் முன்னாள் நிர்வாக இயக்குனர் ஏ.பி.மிஸ்ராவை போலீசார் இன்று கைது செய்தனர்.

இதற்கிடையில், தேவான் ஹவுசிங் கார்ப்பரேஷன் நிறுவனத்திடம் இருந்து 1885 கோடி ரூபாய் திரும்பப் பெறப்பட்டுள்ளதாக மின்சாரத்துறை மந்திரி ஸ்ரீகாந்த் சர்மா தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News