செய்திகள்
கொரோனா பரிசோதனை

சீனாவில் மீண்டும் கொரோனா அதிகரிப்பு

Published On 2021-10-24 03:11 GMT   |   Update On 2021-10-24 03:11 GMT
சீனாவில் தொற்று பரவல் அதிகரிக்கத்தொடங்கி உள்ளதால், பரிசோதனைகளை அதிகரிக்கவும், பாதிப்புக்குள்ளாவோரை சமூக அளவில் தனிமைப்படுத்தவும் ஓட்டல் முன்பதிவுகளை ரத்து செய்யவும் அதிகாரிகள் முழுவீச்சில் இறங்கி உள்ளனர்.
பீஜிங்:

கொரோனாவை உலகுக்கு வழங்கிய சீனாவில் கொரோனா வைரஸ் தொற்று பரவல் மீண்டும் அதிகரிக்கத்தொடங்கி உள்ளது. தலைநகர் பீஜிங்கில் தொற்றுக்கு ஆளானோர் எண்ணிக்கை நேற்று 9 ஆக உயர்ந்துள்ளது.

நாடு முழுவதும் 32 பேருக்கு நேற்று முன்தினம் தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. உள்ளூர் பரவல்கள் தொற்று பாதிப்பு அதிகரிப்புக்கு காரணமாகி இருக்கின்றன.

தொற்று பரவல் அதிகரிக்கத்தொடங்கி உள்ளதால், பரிசோதனைகளை அதிகரிக்கவும், பாதிப்புக்குள்ளாவோரை சமூக அளவில் தனிமைப்படுத்தவும் ஓட்டல் முன்பதிவுகளை ரத்து செய்யவும் அதிகாரிகள் முழுவீச்சில் இறங்கி உள்ளனர்.

பொதுமக்கள் முககவசங்கள் அணியவும், சானிடைசர் கொண்டு கைகளை சுத்தம் செய்யவும் அறிவுறுத்தப்படுகின்றனர். பாதிப்புக்குள்ளாவோரின் தொடர்புகளை கண்டறிவதிலும் அதிகாரிகள் தீவிரம் காட்டுகின்றனர். சீனாவில் இதுவரை 224 கோடி ‘டோஸ்’ தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளதாக அரசு வட்டாரங்கள் கூறுகின்றன.
Tags:    

Similar News