செய்திகள்
கலசப்பாக்கம் தொகுதி

கலசப்பாக்கம் தொகுதி கண்ணோட்டம்

Published On 2021-03-21 07:44 GMT   |   Update On 2021-03-21 07:44 GMT
அதிமுக சார்பில் தற்போது எம்எல்ஏ-வாக இருக்கும் வி. பன்னீர் செல்வம் மீண்டும் களம் நிறுத்தப்பட்டுள்ளார். திமுக சார்பில் சரவணன் களம் இறங்குகிறார்.
சொத்து மதிப்பு

வி. பன்னீர் செல்வம்

1. கையிருப்பு- ரூ. 5,00,000
2. அசையும் சொத்து- ரூ. 55,82,785
3. அசையா சொத்து- ரூ. 24,00,000

சரவணன் சொத்து மதிப்பு

1. கையிருப்பு- ரூ. 50,000
2. அசையும் சொத்து- ரூ. 27,31,484
3. அசையா சொத்து-  ரூ. 1,06,14,000

இதுவரை வெற்றி பெற்றவர்கள் விவரம்:-

1951 நடராச முதலியார்- சுயே
1967 முருகையன்- காங்கிரஸ்
1971 முருகையன்- தி.மு.க.
1977 திருவேங்கடம்- தி.மு.க.
1980 திருவேங்கடம்- தி.மு.க.
1984 பாண்டுரங்கன்- அ.தி.மு.க.
1989 திருவேங்கடம்- தி.மு.க.
1991 சுந்தரசாமி- காங்
1996 திருவேங்கடம்- தி.மு.க.
2001 ராமச்சந்திரன்- அ.தி.மு.க.
2006 அக்ரி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி- அ.தி.மு.க.
2011 அக்ரி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி- அ.தி.மு.க.
2016 வி. பன்னீர்செல்வம் அ.தி.மு.க.

2016 தேர்தல் முடிவு

பன்னீர்செல்வம்- அ.தி.மு.க.- 84,394
செங்கம் ஜி.குமார்-காங்- 57,980
காளிதாஸ்- பா.ம.க.- 23,825
நேரு- தே.மு.தி.க.- 9,932
ராஜபிரபு- சுயே- 1,387
ராஜ்குமார்- சுயே- 1,047
நோட்டா- 1,510

அதிக கிராம பகுதிகளை கொண்ட கலசப்பாக்கம் சட்டமன்ற தொகுதியில் தென்மாதிமங்கலத்தில் சுமார் 4,500 அடி உயரத்தில் உள்ள மூலிகை வாசம் கொண்ட பருவத மலை சிறப்பு வாய்ந்தது ஆகும். இங்கு மல்லிகார்ஜூனர் சாமி கோவில் உள்ளது.

மேலும் படவேடு ரேணுகாம்பாள் கோவில், புதுப்பாளையம் ஒன்றியம் புதூர் மாரியம்மன் கோவில், கலசப்பாக்கத்தை அடுத்த எலத்தூர்- மோட்டுர் பகுதியில் நட்சத்திர சுயம்பு சிவசுப்பிரமணிய சாமி கோவில் உள்ளிட்ட பிரசித்தி பெற்ற கோவில்கள் அமைந்துள்ளன. கலசப்பாக்கம் அடுத்ததாக பூண்டி மகான் ஆற்று சுவாமிகள் ஆசிரமம் அமைந்துள்ளது.

கலசப்பாக்கம் தொகுதியை பொறுத்தவரையில் முழுக்க முழுக்க விவசாயத்தை சார்ந்த தொகுதியாக அமைந்துள்ளது. இதில் குறிப்பாக நெல், கரும்பு, வாழை, பூச்செடிகள் போன்ற பயிர் வகைகளை நம்பியே விவசாயிகள் வாழ்ந்து வருகின்றனர்.

இத்தொகுதியில் விவசாயிகளின் வாழ்வாதாரமாக செய்யாறு மற்றும் மேல்சோழங்குப்பம் பகுதியில் மிருகண்டா அணை, படவேடு செண்பகதோப்பு அணை உள்ளன. மேலும் சுற்றுலாத்தலமாக ஜவ்வாதுமலை, அமிர்தி மற்றும் பருவதமலை ஆகியவை உள்ளன.

கலசப்பாக்கம், போளுர், செங்கம், ஜவ்வாது மலை ஆகிய 4 தாலுகா பகுதிகள், புதுப்பாளையம் பேரூராட்சி, 112 ஊராட்சிகள் இந்த தொகுதியில் அடங்கியுள்ளன.

கலசப்பாக்கம் தொகுதியில் முதலியார் சமூகத்தை சேர்ந்தவர்கள் 50 சதவீதமும், வன்னியர் சமூகத்தை சேர்ந்தவர்கள் 25 சதவீதமும், இதர சமூகத்தை சேர்ந்தவர்கள் 25 சதவீதமும் உள்ளனர்.

இந்த தொகுதியில் 2,41,981 வாக்காளர்கள் உள்ளனர். அவர்கள் வாக்களிக்க 281 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

கலசப்பாக்கம் தொகுதியில் கடந்த 1952-ம் ஆண்டு முதல் 2016-ம் ஆண்டு வரை நடந்த 13 தேர்தல்களில் தி.மு.க. 6 முறையும், அ.தி.மு.க. 5 முறையும், காங்சிரஸ் ஒரு முறையும், சுயேட்சை ஒரு முறையும் வெற்றி பெற்றுள்ளன.
தனி தாலுகாக்கள் உருவாக்கம்

கலசப்பாக்கத்தை தலைமையிடமாக கொண்டு தனி தாலுகா மற்றும் மலைவாழ் மக்களின் நலன் கருதி ஜமுனாமரத்தூரை தலைமையிடமாக கொண்டு தனி தாலுகா உருவாக்கப்பட்டது. பருவதமலைக்கு வருகை தரும் பக்தர்களின் வசதிக்காக மலையை சுற்றி கிரிவலப்பாதை அமைக்கப்பட்டுள்ளது.


பன்னீர்செல்வம், சரவணன்

கலசப்பாக்கம் அரசு மருத்துவமனை தாலுகா மருத்துவமனையாக தரம் உயர்த்தப்பட்டது. மலைவாழ் மக்கள் உற்பத்தி செய்யும் பொருட்களை சந்தைப்படுத்தும் மையம் உருவாக்கப்பட்டுள்ளது. உள்பட பல்வேறு பணிகள் செய்யப்பட்டுள்ளன.

எதிர்பார்ப்புகள்

கலசப்பாக்கம் தொகுதியில் அதிகளவில் கரும்பு விவசாயிகள் உள்ளதால் அரசு கூட்டுறவு சர்க்கரை ஆலை அமைக்க வேண்டும். தீயணைப்பு நிலையம் கொண்டு வரவேண்டும். பருவதமலைக்கு வருகை தரும் பக்தர்களுக்கு மலை மீது குடிநீர் வசதி செய்து தர வேண்டும். புதுப்பாளையம் ஒன்றிய பகுதியில் அதிகம் பூ உற்பத்தியாவதால் அப்பகுதியில் சென்ட் தொழிற்சாலை உருவாக்க வேண்டும்.

ஜவ்வாது மலையில் இருந்து உற்பத்தியாகும் செய்யாற்றில் விவசாயிகளின் நலன்கருதி நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்தும் வகையில் ஆங்காங்கே தடுப்பணைகள் அமைத்து தரவேண்டும். கலசப்பாக்கம் தொகுதியில் அதிகளவில் மணல் கொள்ளை நடக்கிறது. இதனை தடுத்து நிறுத்த வேண்டும். மேற்கண்டவை உள்ளிட்ட பல கோரிக்கைகள் பொதுமக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

அதிமுக சார்பில் தற்போது எம்எல்ஏ-வாக இருக்கும் வி. பன்னீர் செல்வம் மீண்டும் களம் நிறுத்தப்பட்டுள்ளார். திமுக சார்பில் சரவணன் களம் இறங்குகிறார். ஐ.ஜே.கே. சார்பில் ராஜேந்திரன், நாம் தமிழர் சார்பில் பாலாஜி, தேமுதிக சார்பில் நேரு ஆகியோர் நிறுத்தப்பட்டுள்ளனர்.
Tags:    

Similar News