உலகம்
உலக சுகாதார மையம்

ஒமைக்ரான் தடுப்பூசி செயல்திறனை குறைத்து வேகமாக பரவும் அபாயம் கொண்டது: உலக சுகாதார மையம்

Published On 2021-12-13 02:47 GMT   |   Update On 2021-12-13 02:47 GMT
டெல்டா தொற்று குறைவாக உள்ள தென்னாப்பிரிக்காவிலும் டெல்டா தொற்று ஆதிக்கம் செலுத்தும் இங்கிலாந்திலும் ஒமைக்ரான் வைரஸ் வேகமாக பரவுகிறது.
உலகளவில் ஒமைக்ரான் வைரஸ் வேகமாக பரவி வருகிறது. கடந்த 9-ம் தேதி வரை நிலைவரப்படி 63 நாடுகளில் புதிய வகை கொரோனா தொற்று பரவி உள்ளதாக உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.

மேலும், கொரோனாவில் இருந்து பாதுகாத்துக் கொள்ள நாம் செலுத்தி இருக்கும் தடுப்பூசிகளின் செயல்திறனை ஒமைக்ரான் வைரஸ் குறைத்து வேகமாக பரவும் அபாயம் உள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

இதுகுறித்து உலக சுகாதார மையம் கூறியதாவது:-

உலகளவில் கிடைக்கக்கூடிய தரவுகளின் அடிப்படையில் கொரோனா வைரசின் மாறுபாடான டெல்டா தொற்றை மிஞ்சும் அளவிற்கு ஒமைக்ரான் வைரஸ் பரவல் இருக்கும். இது தடுப்பூசி செயல்திறனையும் குறைக்கிறது.

இந்த ஆண்டின் தொடக்கத்தில் இந்தியாவில் முதன்முதலில் கண்டறியப்பட்ட டெல்டா தொற்று உலகின் பெரும்பாலான கொரோனா தொற்றுகளுக்கு காரணமாகும்.

ஆனால், தென்னாப்பிரிக்காவில் தோன்றிய ஒமைக்ரான் தொற்று அதிக எண்ணிக்கையிலான பிறழ்வுகளைக் கொண்டது.  டெல்டா குறைவாக உள்ள தென்னாப்பிரிக்காவிலும் டெல்டா ஆதிக்கம் செலுத்தும் இங்கிலாந்திலும் ஒமைக்ரான் வைரஸ் வேகமாக பரவுகிறது.

ஆரம்பகால சான்றுகள்படி ஒமைக்ரான், தொற்று பரவுதலுக்கு எதிரான தடுப்பூசி செயல்தினைக் குறைக்கிறது.  இருப்பினும், கடந்த வாரம் சில தடுப்பூசி தயாரிப்பு நிறுவனங்கள் மூன்று டோஸ் தடுப்பூசிகள் ஒமைக்ரானுக்கு எதிராக செயல்படுவதாக தெரிவித்துள்ளன.

இவ்வாறு உலக சுகாதார மையம் கூறியது.

இதையும் படியுங்கள்.. தென்ஆப்பிரிக்கா அதிபருக்கு கொரோனா தொற்று உறுதி
Tags:    

Similar News