ஆன்மிகம்
சந்தன மாரியம்மன்

கூவை கிணறு சந்தன மாரியம்மன் கோவில் கொடை விழா

Published On 2021-10-30 05:37 GMT   |   Update On 2021-10-30 05:37 GMT
சாத்தான்குளம் அருகே உள்ள கூவைகிணறு சந்தனமாரியம்மன் கோவில் கொடை விழா 3 நாள்கள் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
சாத்தான்குளம் அருகே உள்ள கூவைகிணறு சந்தனமாரியம்மன் கோவில் கொடை விழா 3 நாள்கள் நடைபெற்றது.

முதல் நாள் தீர்த்தம் எடுத்து வருதல், குடியழைப்பு, கும்பாபிஷேகம், 2-ஆம் நாள் பால்குடம் எடுத்து பக்தர்கள் ஊர்வலமாக வருதல், சுவாமி மஞ்சள் நீராடுதல், உச்சி மதிய பூஜை, பக்தர்கள் முளைப்பாரி எடுத்து அம்மனுக்கு சமர்ப்பித்தல், சிறப்பு அலங்கார பூஜை, சாமக்கொடை, சுடலைமாடன் வேட்டைக்கு செல்லுதல், சுவாமி பூக்குழி இறங்குதல், 3-ஆம்நாள் சுவாமி மஞ்சள் நீராடுதல், அம்மன் வீதி உலா வருதல், முளைப்பாரி கரைத்தல் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றது.

விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் மற்றும் ஊர் மக்கள் செய்திருந்தனர்.
Tags:    

Similar News