தொழில்நுட்பம்

பட்ஜெட் விலையில் புதிய அதிரடி: சியோமி ரெட்மி 4X

Published On 2017-02-28 11:45 GMT   |   Update On 2017-02-28 11:45 GMT
சீன ஸ்மார்ட்போன் நிறுவனமான சியோமி புதிய ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்துள்ளது. பட்ஜெட் விலையில் கிடைக்கும் இந்த ஸ்மார்ட்போனின் சிறப்பம்சங்களை இங்கு பார்ப்போம்.
பீஜிங்:

சீன ஸ்மார்ட்போன் நிறுவனமான சியோமி புதிய ரெட்மி 4X எனும் ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்துள்ளது. புத்தம் புதிய ரெட்மி 4X இரு மாடல்களில் வெளியாகியுள்ளது. 2ஜிபி ரேம் மற்றும் 16 ஜிபி மெமரி கொண்ட மாடல் CNY 699 அதாவது இந்திய மதிப்பில் ரூ.7000 மற்றும் 3ஜிபி ரேம் மற்றும் 32 ஜிபி இன்டெர்னல் மெமரி கொண்ட மாடல் CNY 899 அதாவது இந்திய மதிப்பில் ரூ.8,500 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. 

மெட்டல் பாடி வடிவமைப்பு கொண்ட ரெட்மி 4X ஸ்மார்ட்போனில் கைரேகை ஸ்கேனர் வசதி, முற்றிலும் புதிய வடிவமைப்பு மற்றும் 4100 எம்ஏஎச் பேட்டரி வழங்கப்பட்டுள்Mது. 5.0 இன்ச் 720x1280 பிக்சல் ரெசல்யூஷன் கொண்ட டிஸ்ப்ளே, 1.4 ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டா கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 435 பிராசஸர் 2ஜிபி மற்றும் 3ஜிபி ரேம் வழங்கப்படுகிறது.



16 மற்றும் 32 ஜிபி மெமரி கொண்டுள்ள ரெட்மி 4X ஸ்மார்ட்போனில் மெமரியை நீட்டிக்கும் வசிதியும் வழங்கப்பட்டுள்ளது. இத்துடன் MIUI 8 சார்ந்த ஆண்ட்ராய்டு இயங்குதளம் கொண்டு இயங்குகிறது. மற்ற ரெட்மி ஸ்மார்ட்போன்களை போன்றே ரெட்மி 4X ஸ்மார்ட்போனிலும் டூயல் சிம் ஸ்லாட் வழங்கப்பட்டுள்ளது.  

புகைப்படங்களை எடுக்க 13 எம்பி பிரைமரி கேமரா, எல்இடி பிஸாஷ் மற்றும் 5 எம்பி செல்பி கேமரா வழங்கப்பட்டுள்ளது. இத்துடன் இன்ப்ராரெட் சென்சார் மற்றும் 4ஜி வோல்ட்இ கனெக்டிவிட்டி ஆப்ஷன்களும் வழங்கப்பட்டுள்ளது. புதிய சியோமி ஸ்மார்ட்போனின் விற்பனை தேதி இன்னும் அறிவிக்கப்படவில்லை.

Similar News