செய்திகள்
முக கவசம்

பொது இடங்களில் இனி முக கவசம் தேவையில்லை -இஸ்ரேல் அறிவிப்பு

Published On 2021-04-16 18:24 GMT   |   Update On 2021-04-16 18:24 GMT
பொது இடங்களில் இனி முக கவசம் தேவையில்லை என இஸ்ரேல் நாட்டு சுகாதாரத் துறை அறிவித்துள்ளது.
ஜெருசலேம்:

கொரோனாவுக்கு எதிரான போரில் இஸ்ரேல் வெற்றி பெற்றுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்திகள் வெளியிட்டுள்ளன. இதுதொடர்பாக, இஸ்ரேல் நாட்டு சுகாதாரத் துறை மந்திரி யுலி எடெல்ஸ்டீன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:

கொரோனா வைரசிலிருந்து நம்மைப் பாதுகாக்க முக கவசங்கள் முக்கிய பங்காற்றுகின்றன. இந்நிலையில் நாட்டில் கொரோனா தொற்று குறைந்துள்ளதால் பொது இடங்களில் இனி முக கவசம் தேவையில்லை என்று நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

எனினும், மூடிய அரங்கில் நடைபெறும் நிகழ்வுகளில் மக்கள் முக கவசம் அணிந்து கொள்ள வேண்டும். வரும் ஞாயிறு முதல் இஸ்ரேலில் பொது இடங்களில் மக்கள் முக கவசங்கள் அணிந்து கொள்ளத் தேவையில்லை என தெரிவித்துள்ளார்.

மேலும், கொரோனா தடுப்பூசியை மக்களுக்கு செலுத்தியதன் காரணமாகவே இந்த நிலையை அடைந்துள்ளோம். தடுப்பூசிகள் பலனளிக்கிறது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
Tags:    

Similar News