ஆன்மிகம்
கும்பாபிஷேகம்

மேட்டுப்பாளையம் அருகே மாகாளியம்மன் கோவில் கும்பாபிஷேகம்

Published On 2021-10-25 07:35 GMT   |   Update On 2021-10-25 07:35 GMT
விமான கோபுரம் கலசம், மாகாளியம்மன் மற்றும் பரிவார மூர்த்திகளுக்கு பேரூர் ஆதீனம் சாந்தலிங்க மருதாசல அடிகளார், சிரவை ஆதீனம் குமரகுருபர சுவாமிகள் ஆகியோர் கலச நீரை ஊற்றி கும்பாபிஷேகத்தை நடத்தி வைத்து அருளாசி வழங்கினர்.
மேட்டுப்பாளையத்தை அடுத்த சிறுமுகை லிங்காபுரத்தில் மாகாளியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவில் கும்பாபிஷேகம் நடைபெற்று 12 ஆண்டு நிறைவடைந்ததையொட்டி திருப்பணிகள் நடைபெற்றன. இதைத்தொடர்ந்து கும்பாபிஷேக விழா நேற்று முன்தினம் காலை 10.30 மணிக்கு கணபதி ஹோமத்துடன் தொடங்கியது.

யாகசாலை அமைத்து திருக்குடங்களில் அருள் சக்திகளை எழுந்தருள செய்தல், விமான கலசம் நிறுவுதல், முதல் கால வேள்வி பூஜை ஆகியவை நடைபெற்றன. நேற்று அதிகாலை 5.45 மணிக்கு 2-ம் கால வேள்வி பூஜை, காலை 8 மணிக்கு யாகசாலையில் இருந்து மூல மூர்த்திக்கு அருள்நிலை ஏற்றுதல், மகா தீபாராதனைக்கு பிறகு யாகசாலையில் இருந்து தீர்த்த கலசங்கள் நாதஸ்வரம், இசைமேள தாளம் முழங்க கோவிலை சுற்றி எடுத்து வரப்பட்டது.

விமான கோபுரம் கலசம், மாகாளியம்மன் மற்றும் பரிவார மூர்த்திகளுக்கு பேரூர் ஆதீனம் சாந்தலிங்க மருதாசல அடிகளார், சிரவை ஆதீனம் குமரகுருபர சுவாமிகள் ஆகியோர் கலச நீரை ஊற்றி கும்பாபிஷேகத்தை நடத்தி வைத்து அருளாசி வழங்கினர்.

பேரூர் ஆதீனம் சாந்தலிங்கர் அருள்நெறி மன்றம், குழந்தைவேல், சக்திவேல் ஆகியோர் சிறப்பு பூஜைகளை செய்தனர். விழாவில் பக்தர்கள் திரளாக கலந்து கொண்டனர். கும்பாபிஷேகத்தையொட்டி 1000 பேருக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

Tags:    

Similar News