உள்ளூர் செய்திகள்
பொங்கல் பரிசு தொகுப்பு

மதுரை மாவட்டத்தில் பொங்கல் பரிசு தொகுப்பு 96 சதவீதம் பேருக்கு வினியோகம்

Published On 2022-01-16 08:56 GMT   |   Update On 2022-01-16 08:56 GMT
மதுரை மாவட்டத்தில் 96 சதவீதம் பேருக்கு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்பட்டுள்ளது என்று மாவட்ட வழங்கல் அலுவலர் தெரிவித்தார்.
மதுரை

மதுரை மாவட்டத்தில் ரேஷன்கார்டுதாரர்களுக்கு பச்சரிசி, வெல்லம், முந்திரி, திராட்சை, ஏலக்காய், பாசிப்பருப்பு, நெய், மஞ்சள்தூள், மிளகாய்த்தூள், மல்லித்தூள், கடுகு, சீரகம், மிளகு, புளி, கடலைபருப்பு, உளுந்தம் பருப்பு, ரவை, கோதுமை மாவு, உப்பு, முழு நீள கரும்பு மற்றும் துணிப்பை ஆகியவை அடங்கிய பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்பட்டு வருகிறது.

கடந்த 4&ம் தேதி முதல் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்பட்டு வந்த நிலையில் பண்டிகை நாளை முன்னிட்டு 14, 15, 16 ஆகிய தேதிகளில் ரேஷன் கடைகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது.

இந்த நிலையில் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் பணி நாளை முதல் தொடங்குகிறது.இதுதொடர்பாக மாவட்ட ரேஷன் பொருட்கள் வழங்கல் அதிகாரி முருகேசன் கூறுகையில், மதுரை மாவட்டத்தில் 1394 ரேஷன் கடைகள் உள் ளன. இங்கு 9,27,828 அரிசி கார்டுகள் உள்ளன. 

இதில் 96.5 சதவீதம் பேருக்கு பொங் கல் பரிசு தொகுப்புகள் வழங்கப்பட்டு விட்டன. மீதமுள்ளவர்களுக்கு நாளை முதல் பொங்கல் பரிசு தொகுப்புகள் வழங்கப்பட உள்ளன. மதுரை மாவட்ட ரேஷன் கடைகளில் பொங்கல் பரிசு தொகுப்புகளை அடுத்த சில நாட்களில் முழுமையாக வழங்குவதற்கான பணிகளில் ஈடுபட்டு வருகிறோம்“ என்றார்.
Tags:    

Similar News