ஆன்மிகம்

அஷ்டமி திதியை போற்றும் விரத வழிபாடுகள்

Published On 2019-06-27 06:13 GMT   |   Update On 2019-06-27 06:13 GMT
அஷ்டமியை பெருமைப்படுத்தும் விதமாக பைரவருக்குரிய நாளாக அனுஷ்டித்து பூஜைகள் நடைபெற்று வருகிறது. இந்த நாட்களில் இறைவனை நினைத்து விரதம் இருந்து வழிபாடு செய்தால், நமக்கு வலிமையே சேரும்.
கோள்களின் சுழற்சிபடி, ஜோதிட சாஸ்திரம் நாட்களையும் நேரங்களையும் நிர்ணயித்து அதன்படி செயல்களை செய்ய வழிகாட்டியுள்ளது. அவற்றில் திதிகள் மிக முக்கியப் பங்கு வகிக்கிறது. இதில் சில திதிகளை நன்மை தருவதாக ஏற்றுக்கொண்டு, சிலவற்றை சரியில்லை என ஒதுக்கியும் வைத்துள்ளனர். அதில் முக்கியமான திதியே அஷ்டமி.

பிரதி மாதம் பவுர்ணமி அல்லது அமாவாசையை அடுத்து வரும் எட்டாவது நாள் திதியே அஷ்டமி. எட்டு என்பதையும் ராசியில்லாத எண்ணாகவே எக்காலத்திலும் வெறுத்து ஒதுக்கி வைத்துள்ளனர். இதனால் வருத்தம் கொண்ட அஷ்டமி திதி, தனது அதிதேவதையான பெருமாளிடம் இதற்கான தீர்வு வேண்டி நின்றது.

பெருமாளும் அதன் குறைதீர்க்க அந்தத் திதியில் தனது கிருஷ்ண அவதாரத்தை எடுத்தார். அன்றைய தினம் கோகுலாஷ்டமியாக கொண்டாடப்படுகிறது. சைவத்திலும் அஷ்டமியை பெருமைப்படுத்தும் விதமாக பைரவருக்குரிய நாளாக அனுஷ்டித்து பூஜைகள் நடைபெற்று வருகிறது. இந்த நாட்களில் இறைவனை நினைத்து விரதம் இருந்து வழிபாடு செய்தால், நமக்கு வலிமையே சேரும்.
Tags:    

Similar News