உள்ளூர் செய்திகள்
கொரோனா தடுப்பூசி

பொது சுகாதாரத்துறை அதிரடி: 2-ம் தவணை தடுப்பூசி போடாத 1 1/2 கோடி பேர் பெயர் பட்டியல் வெளியீடு

Published On 2022-05-06 06:03 GMT   |   Update On 2022-05-06 06:03 GMT
தடுப்பூசி போடாவதவர்களின் பெயர், முகவரி, செல்போன் எண்ணுடன் மாவட்ட வாரியாக, கிராமவாரியாக பட்டியல் தயாரித்து வெளியிடப்பட்டுள்ளது.

சென்னை:

தமிழகத்தில் சுமார் 1லு கோடி பேர் 2ம் தவணை தடுப்பூசி போடாமல் உள்ளனர். கொரோனா கட்டுப்பாடு தளர்வுகளால் மக்கள் அஜாக்கிரதையாக இருக்கிறார்கள். அவர்கள் அனைவருக்கும் தடுப்பூசி போட பொது சுகாதாரத்துறையின் பல்வேறு முயற்சிகள் மேற்கொண்டு வருகிறார்கள்.

இப்போது தடுப்பூசி போடாவதவர்களின் பெயர், முகவரி, செல்போன் எண்ணுடன் மாவட்ட வாரியாக, கிராமவாரியாக பட்டியல் தயாரித்து வெளியிடப்பட்டுள்ளது. tndphpm.com என்ற இணையதளத்தில் பார்த்து தெரிந்து கொள்ளலாம்.

இந்த தகவலை வைத்து கிராம வாரியாக தேவைக்கேற்ப முகாம்கள் அமைத்து அனைவருக்கும் தடுப்பூசி போட முடிவு செய்துள்ளார்கள். சென்னை மாநகராட்சியில் மட்டும் 11 லட்சத்து 97 ஆயிரத்து 599 பேர் 2ம் தவணை தடுப்பூசி செலுத்திக கொள்ளவில்லை. பெரம்பலூர், தஞ்சாவூர் மாவட்டங்களில் மட்டும் ஒரு லட்சத்துக்கும் குறைவாக உள்ளது. மற்ற பகுதிகளில் ஊசி போடாதவர்கள் எண்ணிக்கை விபரம் வருமாறு:

அறந்தாங்கி 150272, அரியலூர் 204779, ஆத்தூர் 205549, செங்கல்பட்டு 474327, செய்யார் 114001, கோவை 844657, கூடலூர் 560083, தர்மபுரி 289654, திண்டுக்கல் 242384, ஈரோடு 409918, கள்ளக்குறிச்சி 196087, காஞ்சிபுரம் 274286, கரூர் 172640, கோவில்பட்டி 103782, கிருஷ்ணகிரி 453800, மதுரை 645707, மயிலாடுதுறை 210214, நாகப்பட்டினம் 123921, நாகர்கோவில் 287906, நாமக்கல் 366163, பழனி 154543, பரமகுடி 137277, பெரம்பலூர் 81366, பூந்தமல்லி 120290, புதுக்கோட்டை 180938, ராமநாதபுரம் 240002, ராணிப் பேட்டை 209960, சேலம் 407855, சிவகங்கை 260278, சிவகாசி 315682, தென்காசி 214113, தஞ்சாவூர் 705076, நீலகிரி 53673, தேனி 215568, திருச்சி 506359, திருநெல்வேலி 378082, திருப்பத்தூர் 209806, திருப்பூர் 577837, திருவள்ளூர் 358928, திருவண்ணாமலை 312983, திருவாரூர் 333302, தூத்துக்குடி 403950, வேலூர் 356688, விழுப்புரம் 467610, விருதுநகர் 105938.

Tags:    

Similar News