ஆன்மிகம்
திருவெள்ளறை பெருமாள் கோவிலில் குழந்தை பாக்கியம் கிடைக்க பரிகாரம்

திருவெள்ளறை பெருமாள் கோவிலில் குழந்தை பாக்கியம் கிடைக்க பரிகாரம்

Published On 2020-12-02 06:06 GMT   |   Update On 2020-12-02 06:06 GMT
திருவெள்ளறை புண்டரீகாட்சபெருமாள் கோவிலில் தம்பதியினர் வழிபட்டால் குழந்தைப்பேறு கிடைக்கும் என்பது பக்தர்களின் அசைக்க முடியாத நம்பிக்கையாகும்.
திருவெள்ளறை புண்டரீகாட்சபெருமாள் கோவில் 108 திவ்யதேசங்களில் ஒன்றாக கருதப்படுகிறது. இந்த கோவிலில் உள்ள பெருமாள் மற்றும் தாயாரை வணங்குவதற்காக பல்வேறு பகுதிகளில் இருந்தும் தினமும் ஏராளமான பக்தர்கள் வந்துசெல்கின்றனர். 

சிறப்புமிக்க இந்த கோவிலில்ஆண்டுதோறும் கார்த்திகை மாதத்தில் வரும் ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமை அன்றும், இக்கோவிலில் உள்ள பத்மதீர்த்தம், வராகதீர்த்தம், மணிகர்ணிகா தீர்த்தம், குசஹஸ்திதீர்த்தம், கந்தசீரபுஷ்கரணி தீர்த்தம் ஆகிய பஞ்ச தீர்த்தங்களில் புனிதநீராடி, பலிபீடத்தை 12 முறை சுற்றி வந்து, நெய்தீபம் ஏற்றியும், பொங்கல் படையலிட்டு புண்டரீகாட்சபெருமாள், பங்கஜவல்லி தாயாரை பயபக்தியுடன் வணங்கி, அதன்பிறகு படையலிட்ட பொங்கலை தம்பதியினர் சாப்பிட்டால் குழந்தைப்பேறு கிடைக்கும் என்பது பக்தர்களின் அசைக்க முடியாத நம்பிக்கையாகும். 

இந்நிலையில், கார்த்திகை மாதஇரண்டாவது ஞாயிற்றுக்கிழமையானநேற்று திருமணமாகி பலவருடங்களாகியும் குழந்தை இல்லாத தம்பதியினர் நேற்று திருச்சி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் வந்து ஐந்து தீர்த்தங்களில் புனித நீராடி நெய்தீபம் ஏற்றி, பொங்கல் படையலிட்டு பெருமாள் மற்றும் தாயாரை பயபக்தியுடன் வணங்கிச் சென்றனர்.
Tags:    

Similar News