ஆன்மிகம்
அய்யா வைகுண்டர்

முட்டப்பதி அய்யா வைகுண்டசாமி கோவில் பங்குனி திருவிழா இன்று தொடங்குகிறது

Published On 2021-03-26 08:41 GMT   |   Update On 2021-03-26 08:41 GMT
கன்னியாகுமரி அருகே உள்ள முட்டப்பதி அய்யா வைகுண்டசாமி கோவிலில் பங்குனி திருவிழா இன்று தொடங்குகிறது. திருவிழா அடுத்த மாதம் (ஏப்ரல்) 5-ந் தேதி வரை 11 நாட்கள் நடக்கிறது.
கன்னியாகுமரி அருகே உள்ள முட்டப்பதியில் அய்யா வைகுண்ட சாமி கோவில் உள்ளது. இங்கு ஆண்டு தோறும் பங்குனி மாதம் 11 நாட்கள் திருவிழா நடைபெறும். இந்த ஆண்டுக்கான பங்குனி திருவிழா இன்று (வெள்ளிக்கிழமை) கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. திருவிழா அடுத்த மாதம் (ஏப்ரல்) 5-ந் தேதி வரை 11 நாட்கள் நடக்கிறது. இன்று (வெள்ளிக்கிழமை) அதிகாலை 5.30 மணிக்கு கொடியேற்றம், மதியம் 12 மணிக்கு பால்கடலில் தீர்த்தமாட பதியில் இருந்து ஊர்வலமாக புறப்பட்டு செல்லுதல், இரவு 7 மணிக்கு கருட வாகனத்தில் அய்யா எழுந்தருளி பதியை சுற்றி பவனி வருதல் நடக்கிறது.

2-ம் திருவிழா முதல் 5-ம் திருவிழா வரை இரவு 7 மணிக்கு அன்ன வாகனத்தில் அய்யா எழுந்தருளி பவனி வருதல், 6 மற்றும் 7-ம் திருவிழாவில் இரவு 7 மணிக்கு சப்பர வாகன பவனி, 8-ம் திருவிழாவான அடுத்த மாதம் (ஏப்ரல்) 2-ந் தேதி கலி வேட்டை நிகழ்ச்சி, இரவு 8 மணிக்கு அய்யா குதிரை வாகனத்தில் எழுந்தருளி பதியிலிருந்து ஊர்வலமாக புறப்பட்டு சென்று முட்டப்பதியின் வடக்கே கடலில் கலி வேட்டையாடும் நிகழ்ச்சி, பின்னர் அன்னதானம் போன்றவை நடக்கிறது.

5-ந் தேதி மாலை 5 மணிக்கு அய்யா சப்பர வாகனத்தில் எழுந்தருளி பதியை சுற்றி பவனி வருதல், தொடர்ந்து விடியற்காலை வரை திருஏடு வாசிப்பு நிகழ்ச்சி ஆகியவை நடைபெறும்.

திருவிழாவையொட்டி 11 நாட்களும் இரவு 7 மணிக்கு வாகன பணிவிடையும், அன்னதானமும் நடக்கிறது. விழாவுக்கான ஏற்பாடுகளை முட்டப்பதி தலைமை தர்மகர்த்தா பாலசுந்தரம், தர்மகர்த்தா செல்வராஜன் ஆகியோர் செய்துள்ளனர்.
Tags:    

Similar News