தொழில்நுட்பம்
ரெட்மி கே30 5ஜி

இணையத்தில் லீக் ஆன 10 ஜி.பி. ரேம் கொண்ட ரெட்மி ஸ்மார்ட்போன் விவரங்கள்

Published On 2020-01-02 07:47 GMT   |   Update On 2020-01-02 07:47 GMT
ரெட்மி பிராண்டின் புதிய ஸ்மார்ட்போன் 10 ஜி.பி. ரேம் உடன் உருவாகி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.



ரெட்மி பிராண்டின் கே30 5ஜி ஸ்மார்ட்போன் 10 ஜி.பி. ரேம் மாடல் விவரங்கள் சீன வலைத்தளத்தில் லீக் ஆகியுள்ளது. முன்னதாக ரெட்மி கே30 மற்றும் ரெட்மி கே30 5ஜி ஸ்மார்ட்போன்கள் கடந்த மாதம் சீனாவில் அறிமுகம் செய்யப்பட்டன.

அந்த வகையில் ரெட்மி கே30 5ஜி ஸ்மார்ட்போனின் 10 ஜி.பி. விவரங்கள் இணையத்தில் வெளியாகி இருக்கிறது. முன்னதாக இதே ஸ்மார்ட்போனின் 12 ஜி.பி. ரேம் விவரங்கள் இணையத்தில் வெளியாகின. அந்த வகையில் புதிய ஸ்மார்ட்போன் 6 ஜி.பி., 8 ஜி.பி. மற்றும் 10 ஜி.பி. ஆப்ஷன்கள் லீக் ஆகி இருக்கின்றன. இவற்றுடன் முறையே 64 ஜி.பி., 128 ஜி.பி. மற்றும் 256 ஜி.பி. மெமரி வழங்கப்படுகின்றன.

தற்சமயம் வெளியாகி இருக்கும் தகவல்களில் ரெட்மி கே30 5ஜி ஸ்மார்ட்போன் M2001G7AC எனும் மாடல் நம்பர் கொண்டிருக்கிறது. இதன் 10 ஜி.பி. ரேம் மற்றும் 256 ஜி.பி. மெமரி மாடல் விரைவில் அறிமுகம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. முன்னதாக வெளியான 12 ஜி.பி. ரேம் மாடல் M2001G7AE எனும் மாடல் நம்பர் கொண்டிருந்தது.



தற்சமயம் சியோமி நிறுவனம் 8 ஜி.பி. ரேம், 256 ஜி.பி. மெமரி மாடலை டாப் எண்ட் வேரியண்ட்டாக சீனாவில் CNY 2899 (இந்திய மதிப்பில் ரூ. 29,100) விலையில் விற்பனை செய்து வருகிறது. புதிய 10 ஜி.பி. அல்லது 12 ஜி.பி. ரேம் மாடல் வெளியாகும் பட்சத்தில் இவற்றின் விலை அதிகமாக நிர்ணயம் செய்யப்படும் என்றே தெரிகிறது.

ரெட்மி கே30 ஸ்மார்ட்போனின் மற்ற சிறப்பம்சங்களை பொருத்தவரை 6.67 இன்ச் ஃபுல் ஹெச்.டி. பிளஸ் ஹோல் பன்ச் டிஸ்ப்ளே, ஸ்னாப்டிராகன் 765ஜி பிராசஸர், ஹைப்ரிட் மைக்ரோ எஸ்.டி. கார்டு ஸ்லாட், 4500 எம்.ஏ.ஹெச். பேட்டரி, 30 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி வழங்கப்படுகிறது.

ரெட்மி கே30 5ஜி ஸ்மார்ட்போனில் 64 எம்.பி. பிரைமரி கேமராவுடன், 5 எம்.பி. மேக்ரோ லென்ஸ், 2 எம்.பி. டெப்த் சென்சார், 8 எம்.பி. கேமரா வழங்கப்படுகிறது. முன்புறம் 20 எம்.பி. மற்றும் 2 எம்.பி. என இரு செல்ஃபி கேமராக்கள் வழங்கப்பட்டுள்ளன. இத்துடன் 5ஜி, என்.எஃப்.சி. மற்றும் 3.5 எம்.எம். ஆடியோ ஜாக் வசதி வழங்கப்படுகிறது.
Tags:    

Similar News