வழிபாடு
காமாட்சியம்மன் சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்த காட்சி.

வால்பாறையில் காமாட்சியம்மன் கோவில் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது

Published On 2022-02-11 08:54 GMT   |   Update On 2022-02-11 08:54 GMT
வால்பாறையில் காமாட்சியம்மன் கோவில் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதில் திரளான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.
வால்பாறை வாழைத்தோட்டம் பகுதியில் பிரசித்தி பெற்ற காமாட்சியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலின் 54-ம் ஆண்டு திருவிழாவை முன்னிட்டு கடந்த மாதம் 31-ந் தேதி காப்பு கட்டி நோன்பு சாத்தி தொடங்கியது. இதனை தொடர் ந்து ஒவ்வொரு நாளும் சிறப்பு வழிபாடுகள், பூஜைகள் நடைபெற்று வந்தது. நேற்று காலை 6.00 மணிக்கு கணபதி ஹோமம், நவகிரக ஹோமம், கொடிமர பூஜை ஆகிய பூஜைகள் நடத்தப்பட்டது. இதையடுத்து கொடியேற்றம் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு அம்மனை தரிசனம் செய்தனர்.

அதனை தொடர்ந்து தெய்வ குல காளியம்மன் கோவில் உட்பட பல்வேறு பிரசித்தி பெற்ற கோவில்களில் இருந்து தீர்த்தங்கள் கொண்டு வந்து காமாட்சியம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடத்தப்பட்டு நடுமலை ஆற்றில் கும்பஸ்தாபனம் செய்யப்படுகிறது. வருகிற 16-ந் தேதி பொங்கல் வைத்தும் வழிபாடு நடைபெறுகிறது. இதனையடுத்து வால்பாறை சுப்பிரமணியசுவாமி கோவிலிருந்து ஏகாம்பர ஈஸ்வரரை மாப்பிள்ளையாக அழைத்து வந்து காமாட்சியம்மனுக்கு திருக்கல்யாணம் நடைபெறுகிறது. அதனை தொடர்ந்து கோவில் வளாகத்தில் அன்னதானம் நடைபெறுகிறது. மாலையில் அம்மன் திருவீதிஉலா நடைபெறுகிறது.

விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் செய்து வருகின்றனர்.
Tags:    

Similar News