உள்ளூர் செய்திகள்
வழிபாட்டுத் தலங்கள் இன்று திறக்கப்பட்டன.

மதுரையில் 3 நாட்களுக்கு பிறகு வழிபாட்டு தலங்கள் திறப்பு

Published On 2022-01-10 11:19 GMT   |   Update On 2022-01-10 11:19 GMT
கொரோனா ஊரடங்கு காரணமாக 3 நாட்கள் மூடப்பட்டிருந்த கோவில் உள்ளிட்ட வழிபாட்டுத் தலங்கள் இன்று திறக்கப்பட்டன. வழிபாட்டுத் தலங்களில் பக்தர்கள் திரண்டனர்.
மதுரை

தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய 3 நாட்களில் பக்தர்கள் கோவிலுக்குள் அனுமதிக்கப்பட மாட்டார்கள்” என்று தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டது. 

அதன்படி மதுரை மாவட்டத்தில் மீனாட்சி அம்மன் கோவில், கூடல் அழகர் பெருமாள் கோவில், திருப்பரங்குன்றம் முருகன் கோவில், கள்ளழகர் கோவில், பழமுதிர்ச்சோலை முருகன் கோவில் உள்பட முக்கிய ஆலயங்கள் கடந்த வெள்ளிக்கிழமை மூடப்பட்டது. 3 நாட்கள் பக்தர்களின்றி வழக்கமான பூஜைகள் நடைபெற்றன.

3 நாள் தடைகாலம் முடிந்த நிலையில், இன்று காலை கோவில்கள் திறக்கப்பட்டன. இதையொட்டி பக்தர்கள் அதிகாலையிலேயே மீனாட்சி அம்மன் கோவிலில் திரண்டு சாமி தரிசனம் செய்தனர் அதிலும் குறிப்பாக ஐயப்ப பக்தர்களின் கூட்டம் அதிகமாக இருந்தது.

மதுரை கூடலழகர் பெருமாள் கோவிலில் பகல் பத்து உற்சவம் நடந்து வருகிறது. 8-ம் நாளான இன்று பெருமாள் நித்யகல்யாண சேவையில் காட்சி கொடுத்தார்.

இதேபோல் பெரிய முதல் சிறிய கோவில்கள் திறக்கப்பட்டு பக்தர்கள் வழிபாட்டுக்கு அனுமதிக்கப்பட்டனர்.
Tags:    

Similar News