லைஃப்ஸ்டைல்
பிரெட் சென்னா சீஸ் ரோல்

ருசியான பிரெட் சென்னா சீஸ் ரோல்

Published On 2020-09-11 10:31 GMT   |   Update On 2020-09-11 10:31 GMT
குழந்தைகளை கவரும் விதத்தில் ரோல் வடிவில் உணவுகளை தயார் செய்து சுவைக்க கொடுக்கலாம். இன்று பிரெட், சென்னா, சீஸ் பயன்படுத்தி ரோல் தயார் செய்வது குறித்து பார்ப்போம்.
தேவையான பொருட்கள் :

பிரெட் துண்டுகள் - 10
சீஸ் துண்டுகள் - 10
வேகவைத்த சென்னா - 1 கப்
பெ.வெங்காயம் - 1
குடைமிளகாய் - 1
கொத்தமல்லி தழை - 1 கைப்பிடி
கரம் மசாலாதூள் - 1 டீஸ்பூன்
மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
உப்பு, எண்ணெய் - தேவைக்கு
தக்காளி சாஸ் - சிறிதளவு



செய்முறை:

கொத்தமல்லி, பெரிய வெங்காயம், குடைமிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

வேக வைத்த சென்னாவை மிக்சியில் போட்டு லேசாக மசித்துகொள்ளவும்.

வாணலியை அடுப்பில் வைத்து அது சூடானதும் வெங்காயம், குடை மிளகாயை கொட்டி லேசாக வதக்கவும்.

பின்னர் அதனுடன் கரம் மசாலா தூள், மிளகாய் தூள், உப்பு சேர்த்து வதக்கவும்.

பச்சை வாசம் நீங்கியதும் சென்னா, கொத்தமல்லி தழை சேர்த்து கிளறி இறக்கிக்கொள்ளவும்.

சூடு ஆறியதும் நன்றாக பிசைந்து நீள் வாக்கில் 10 துண்டுகளாக உருட்டிவைத்துக்கொள்ளவும்.

பின்னர் அவற்றின் மேல் சீஸ் துண்டுகளை வைத்து சுருட்டிக்கொள்ளவும்.

பிரெட் துண்டுகளை தண்ணீரில் நனைத்து பிழிந்து அவற்றின் மேல் சென்னா மசாலா கலவையை வைத்து நான்கு புறமும் மூடியிருக்கும்படி உருட்டி வைத்துக்கொள்ளவும்.

தோசைக்கல்லில் சிறிதளவு நெய் ஊற்றி அது சூடானதும் பிரெட் ரோலை வைத்து இரு புறமும் கருகாமல் புரட்டிப்போட்டு எடுக்கவும்.

அதன் மீது தக்காளி சாஸ் ஊற்றி ருசிக்கலாம்.
 
சூப்பரான பிரெட் சென்னா சீஸ் ரோல் ரெடி.

- இதை படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
Tags:    

Similar News