செய்திகள்
கோப்புப்படம்.

சரக்கு ரெயிலில் வந்த சோளங்கள் முளைவிட்டன

Published On 2021-07-18 08:03 GMT   |   Update On 2021-07-18 08:03 GMT
பெட்டியில் மேற்கூரை வழியாக மழைநீர் கசிந்துள்ளது. இதில் நனைந்த சோளம் முளைவிட்டுள்ளது.
திருப்பூர்:

கோழிப்பண்ணைகளுக்கு தேவையான மக்காச்சோளம், சோளம் உள்ளிட்ட தீவனங்கள் வடமாநிலங்களில் இருந்து சரக்கு ரெயில்களில் திருப்பூர் கொண்டுவரப்படுவது வழக்கம்.

கடந்த 10 நாளாக வட மாநிலங்களில் கனமழை பெய்து வருகிறது. இந்தநிலையில்  பீஹார் மாநிலத்தில் இருந்து சோளம் ஏற்றி வந்த சரக்கு ரயில்  திருப்பூர் வந்தடைந்தது.

இதில் ஒரு பெட்டியில் இருந்த 10க்கும் மேற்பட்ட சோள மூட்டைகள் முளைவிட்டிருந்தன
.
இதுகுறித்து தொழிலாளர்கள்  கூறுகையில்,‘பெட்டியில் மேற்கூரை வழியாக மழைநீர் கசிந்துள்ளது. இதில் நனைந்த சோளம் முளைவிட்டுள்ளது.

சோளம் முளை விட்ட மூட்டைகளை காயவைத்துவிட்டு,பிற மூட்டைகளை லாரிகளில் ஏற்றி பண்ணைகளுக்கு அனுப்பி வைத்தோம் என்றனர்.
Tags:    

Similar News