செய்திகள்
ஷர்துல் தாக்குர்

முதலில் சிராஜ், அடுத்து பும்ரா - இங்கிலாந்து தொடரில் நடந்தது என்ன? - மவுனம் கலைத்த ஷர்துல் தாக்குர்

Published On 2021-09-18 18:53 GMT   |   Update On 2021-09-18 18:53 GMT
இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இந்தியா 2-1 என முன்னிலை பெற்றிருந்தபோது, 5வது டெஸ்ட் கொரோனா அச்சத்தால் ரத்துசெய்யப்பட்டது.
புதுடெல்லி:

இந்திய அணி இங்கிலாந்து சென்று 5 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடியது. இதில் 4 போட்டிகளின் முடிவில் இந்தியா 2-1 என்ற கணக்கில் முன்னிலை வகித்தது.

இரு அணிகளுக்கு இடையிலான ஐந்தாவது மற்றும் கடைசி போட்டி கொரோனா அச்சம் காரணமாக ரத்து செய்யப்பட்டது.

இந்நிலையில், டெஸ்ட் போட்டிகளின் போது இந்திய வீரர்கள் சிராஜ் மற்றும் பும்ராவை இங்கிலாந்து வீரர்கள் வம்புக்கு இழுத்தது குறித்து வேகப்பந்து வீச்சாளர் ஷர்துல் தாக்குர் மனம் திறந்துள்ளார். இதுதொடர்பாக அவர் கூறியதாவது:

இங்கிலாந்து டெஸ்ட் தொடரின்போது இரு அணி வீரர்களும் வார்த்தைப் போர்களில் ஈடுபட்டிருந்தனர். முதலில் சிராஜ் - ஆண்டர்சன், ஆண்டர்சன் மற்றும் ஜஸ்பிரீத் பும்ரா ஆகியோருக்கு இடையிலான பிரச்சினை, ஒட்டுமொத்த அணி மோதலாக மாறிவிட்டது.



டெய்ல் எண்டர்களாகிய நாங்கள் வெளிநாட்டு மைதானங்களில் பேட்டிங் செய்யும்போது பெரிதும் சிரமங்களைச் சந்திக்கிறோம். ஆஸ்திரேலியாவில் கூட எங்கள் அணியின் கடைசி வீரரான நடராஜனுக்கு எதிராக ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர்கள் கம்மின்ஸ் மற்றும் மிட்சல் ஸ்டார்க் ஆகியோர் கடுமையான பவுன்சர்களை வீசினர். அப்படி நாங்கள் எதிர்கொண்டதை தான் தற்போது இங்கிலாந்து அணிக்கு எதிராக செய்தோம். 

அயல்நாட்டு வீரர்கள் எங்களுக்கு எதிராக ஆக்ரோஷமாக பந்துகளை வீசுவது சரி என்றால், அதையே நாங்கள் திருப்பிச் செய்தால் தவறா ? நாங்கள் ஏன் பவுன்சர் பந்துகளை வீசக்கூடாது? நாங்கள் யாரையும் திருப்திப்படுத்த விளையாடவில்லை. வெற்றி பெறவே விளையாடுகிறோம் என ஆவேசமாக தெரிவித்துள்ளார்.
Tags:    

Similar News