இந்தியா
சரத் பவார்

கோவா தேர்தல்: காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கூட்டணி?- சரத் பவார் பேட்டி

Published On 2022-01-11 11:56 GMT   |   Update On 2022-01-11 11:56 GMT
எத்தனை தொகுதிகள் இரு கட்சிகளுக்கும் வழங்கப்படும் என்பதை விளக்கிவிட்டேன் என சரத் பவார் தெரிவித்துள்ளார்.
மும்பை:

கோவா மாநிலத்தில் வரும் பிப்ரவரி 14-ம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ளது. இந்நிலையில் அந்த தேர்தலை எதிர்க்கொள்வதற்காக காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ் கட்சிகளுடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத் பவார் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து பத்திரிகையாளர் சந்திப்பில் அவர் கூறியதாவது:-

கோவாவில் பாஜக ஆட்சியை மாற்ற வேண்டிய தேவை வந்துவிட்டது. மக்களுக்கும் புதிய ஆட்சி தேவைப்படுகிறது. இதற்காக திரிணாமுல் காங்கிரஸ் மற்றும் காங்கிரஸுடன் இணைந்து கூட்டணி அமைக்க மம்தா பானர்ஜி மற்றும் காங்கிரஸ் தலைவர்களுடன் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டு வருகிறேன். எத்தனை இடங்கள் இரு கட்சிகளுக்கும் வழங்கப்படும் என்பதை விளக்கிவிட்டேன். விரைவில் இறுதி முடிவு அறிவிக்கப்படும்.



உத்தரப்பிரதேச தேர்தலை பொறுத்தவரை சுவாமி பிரசாத் மவுரியா சமாஜ்வாதி கட்சியில் இணைந்துவிட்டார். மேலும் 13 எம்.எல்.ஏக்கள் பாஜகவில் இருந்து சமாஜ்வாதி கட்சியில் இணையவுள்ளனர். உத்தரப்பிரதேசத்திலும் கண்டிப்பாக மாற்றம் வரப்போகிறது.  வகுப்புவாத பிரிவினைவாதம் உத்தரப்பிரதேசத்தில் தலைதூக்கி இருக்கிறது. இதற்கு அம்மாநில மக்கள் சரியான பதிலடி தரப்போகிறார்கள்.

இவ்வாறு சரத் பவார் தெரிவித்தார்.

Tags:    

Similar News