செய்திகள்
மீன்பிடி வலை சீரமைக்கும் கூடாரத்தில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் கலந்து கொண்ட மீனவர்கள்

ராமேசுவரம் மீனவர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தம்

Published On 2021-09-26 09:14 GMT   |   Update On 2021-09-26 09:14 GMT
மீனவர்கள் கொரோனா தொற்று காலமாக இருப்பதால் தாங்கள் படகுகளை சீரமைக்க முடியாமல் மீனவர்கள் உள்ளனர். இதனால் ஆய்வுகளை சில மாதங்கள் கழித்து செய்ய அதிகாரிகளிடம் கோரிக்கை வைத்தனர்.

ராமேசுவரம்:

ராமேஸ்வரத்தில் ஏறத்தாழ 800-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் 5 ஆயிரத்துக்கு மேற்பட்ட மீனவர்கள் சுழற்சி முறையில் கடலுக்கு சென்று பாக் ஜலசந்தி மற்றும் மன்னார் வளைகுடா கடலோரப் பகுதிகளில் மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில் ராமேசுவரம் கடலோர பகுதியில் மீன்பிடிப்பதற்காக அனுமதி இல்லாமல் 3 படகுகள் சில நாட்களுக்கு முன்பு வந்தது.

இது குறித்து மீனவர் சங்க தலைவர்கள் ராமேசுவரம் மீன் துறை அதிகாரிகளிடம் அனுமதி இல்லாமல் மீன்பிடிக்க ராமேசுவரம் கடலோரப் பகுதியில் நிறுத்தப்பட்டுள்ள படகுகளை அப்புறப்படுத்த கோரிக்கை விடுத்தனர்.

ஆனால் அதிகாரிகள் அந்த படகுகளை அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்காமல் மற்ற மீனவர்களை அச்சுறுத்தும் வகையில் சோதனை என்ற முறையில் அனைத்து படகுகளையும் சோதனை செய்ய வேண்டுமென நடவடிக்கை எடுத்து வந்தனர்.

இதற்கு மீனவர்கள் கொரோனா தொற்று காலமாக இருப்பதால் தாங்கள் படகுகளை சீரமைக்க முடியாமல் மீனவர்கள் உள்ளனர். இதனால் ஆய்வுகளை சில மாதங்கள் கழித்து செய்ய அதிகாரிகளிடம் கோரிக்கை வைத்தனர்.

ஆனால் படகுகளை அப்புறப்படுத்த எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதை கண்டித்து ராமேசுவரம் மீனவர்கள் நேற்று முதல் அக்டோபர் 1-ந்தேதி வரை வேலை நிறுத்தம் செய்வது என முடிவு செய்தனர்.

இதனையடுத்து நேற்று முதல் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் மீனவர்கள் ஈடுபட்டுள்ளனர்.

இன்று 2-வது நாளாக அவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News