ஆன்மிகம்
திருவண்ணாமலை கிரிவல முறைகள்

திருவண்ணாமலை கிரிவல முறைகள்

Published On 2019-10-24 09:09 GMT   |   Update On 2019-10-24 09:09 GMT
திருவண்ணாமலையில் கிரிவலம் மேற்கொள்ள பல்வேறு முறைகள் உள்ளன. அவை என்னவென்று விரிவாக அறிந்து கொள்ளலாம்.
திருவண்ணாமலையில் கிரிவலம் வந்தால் தான், நமது அனைத்து முற்பிறப்பு கர்மவினைகளும் தீரும். கார்த்திகை மாத பவுர்ணமி அன்று ஐந்து முறை அண்ணாமலை கிரிவலம் சென்றால்,நமக்கு மறுபிறவி இல்லாத முக்தி கிட்டும் என்று ஒரு விதியை அருணாச்சலேஸ்வரர் வகுத்துள்ளார்.

பணம் சம்பாதிப்பது, சொகுசாக வாழ்வது, நினைத்த காரியத்தை பணத்தின் மூலமாக சாதிப்பது மட்டுமே வாழ்க்கை என்று பலர் நினைத்துக் கொண்டிருக்கின்றார்கள். ஆனால் அதையும் தாண்டி சில ஆன்மீக கடமைகள் உள்ளன. குறிப்பாக திருவண்ணாமலையில் கிரிவலம் வருவதன் முக்கியத்துவத்தை உணர வேண்டும்.

200 ஆண்டுகளுக்கு முன்பு வரை,பாரத நாட்டில் எந்த மாநிலத்தில் யார் திருமணம் செய்தாலும்,திருமணம் ஆன ஒரு வருடத்திற்குள் தம்பதியாக வருகை தந்து கிரிவலம் வந்து அண்ணாமலையாரை தரிசனம் செய்வர். இஸ்லாமியப் படையெடுப்பினால் இந்தப் பழக்கம் குறைந்து இன்று மறைந்துவிட்டது.

மஞ்சள் நிற ஆடைகளை தம்பதிகள் அணிந்து, அண்ணாமலை ஆலயத்தினுள் அமைந்திருக்கும் குதூகல நந்தியிடம் வழிபட்டு மானசீகமாக அனுமதி பெறுவர்; பிறகு, அங்கிருந்து இரட்டைப்பிள்ளையார் கோவிலுக்குச் சென்று அவரிடம் அனுமதி பெறுவர்; பிறகு அங்கிருந்து தேரடி முனீஸ்வரரை வழிபட்டு ‘வழித்துணைக்கு வாருமய்யா!’ என்று வேண்டிக்கொண்டு கிரிவலம் செல்வர். உடன் மனைவியின் சகோதரர்களும், சகோதரி களும் தம்பதியரின் பெற்றோர்களும் கிரிவலம் வருவர்.

ஒவ்வொரு லிங்கத்தின் வாசலிலும் நின்று தேவாரப்பதிகங்கள் பாடுவர்; நிறைவாக தம்பதியரின் பெயர்களைச் சொல்லி, குலம் கோத்திரம் கூறி அர்ச்சனை செய்வர். ஒவ்வொரு லிங்கத்தின் வாசலிலும் அன்னதானம், ஆடைதானம், ருத்ராட்ச தானம் செய்வர்; அகத்தியர் ஆஸ்ரமம் தற்போது அமைந்திருக்கும் இடத்தில் நின்று வாழ்க்கை சங்கல்பம் செய்வர். அகத்தியர் ஆஸ்ரமத்தில் இருந்து பார்க்கும் தரிசனத்திற்கு ‘சிவசக்தி ஐக்கிய தரிசனம்’ என்று பெயர்.

இந்த தரிசனம் செய்த பின்னரே இல்லற வாழ்க்கையைத் துவங்குவர்; நிறைவாக, பூத நாராயணப் பெருமாள் கோவிலில் கிரிவலத்தை நிறைவு செய்து விட்டு, அருணாச்சலேஸ்வரர் ஆலயத்தினுள் சென்று முதலில் (உள்பிரகாரத்தில் இருக்கும்) துர்வாச மகரிஷியிடம் தாம் தம்பதியாக வந்திருப்பதாகவும்,கிரிவலம் நிறைவு செய்துவிட்டதாகவும் மானசீகமாக தெரிவிப்பர்; சுபமான சகுனம் தென்படும் வரை அங்கேயே மணிக்கணக்கில்,சில சமயம் நாள் கணக்கில் காத்திருப்பர். சாபம் தருவதற்குப் பெயர் போன துர்வாச மகரிஷி, கிரிவலம் சென்று வந்து அவரை வழிபடும் போது அவரே மனதார வாழ்த்துவார்;அப்படிப்பட்ட வாழ்த்துக்கள் சகுனமாக உணர்ந்தப் பின்னரே அண்ணா மலையாரையும், உண்ணாமுலையையும் தம்பதியர் தரிசிப்பர்.

பல ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக அகத்திய மகரிஷி மூலமாக நாம் அறிந்திருக்கும் முறையான கிரிவலமுறை இதுதான். சிறந்த மனைவி அமைய வேண்டும் என்ற எதிர் பார்ப்பில் இருப்பவர்கள்.

பஞ்சமித் திதி (தேய்பிறை பஞ்சமியிலும் செல்லலாம்) வரும் நாளில் அண்ணாமலை கிரிவலம் வரவேண்டும்; குபேரலிங்கத்தைக் கடந்ததும், இடுக்குப் பிள்ளையார் வரும்; அதையும் கடந்ததும் ஒரிடத்தில் இருந்து பஞ்சமுக தரிசனம் காணவேண்டும்; பஞ்சமுகதரிசனம் செய்யும் போது சிறந்த மனைவி அமைய வேண்டிக் கொள்ள வேண்டும். எலுமிச்சை அன்னம் தானம் அந்த இடத்தில் செய்ய வேண்டும். குறைந்தது மூன்று பேர்களுக்கு அதிகபட்சம் கணக்கு இல்லை. அதன் பிறகு,பஞ்சமுகதரிசனம் செய்த இடத்தில் ஐந்து முறை சாஷ்டாங்கமாக நமஸ் கரிக்க வேண்டும்;

இவ்வாறு செய்தால், மனமறிந்த செயல்படும் பெண், இப்பிறவியிலேயே மனைவியாக அமைவாள். குழந்தைச் செல்வம் கிடைக்க: திருவோணம் நட்சத்திரம் வரும் நாளில், அண்ணாமலைக்கு ஒரு பசுவையும், கன்றையும் வாங்கி வரவேண்டும். அதில் கன்றை தமது தோளில் சுமந்தவாறும்,பசுவை ஓட்டியவாறு கிரிவலம் வரவேண்டும். கிரிவலம் நிறைவடைந்தப் பின்னர், அருணாச்சலேஸ்வரர் ஆலயத்திற்கு அந்த பசுவையும், கன்றையும் தானமாக வழங்க வேண்டும்.

பிறகு, அண்ணாமலையார் சன்னதிக்குப் பின்புறம் இருக்கும் ஸ்ரீவேணுகோபால் சுவாமியைத் துதிக்க வேண்டும். பிறகு, உண்ணாமுலையம் மனிடம் கோரிக்கை வைக்க வேண்டும். அதன் பிறகு,வேறு எந்த ஆலயமும் செல் லாமல் அவரவர் வீடு திரும்ப வேண்டும். இப்படிச் செய்வதன் மூலமாக குழந்தைச் செல்வம் கிட்டும்.

1008 நாட்கள் கிரிவலம் வருவதன் மூலமாக நமது நட்சத்திர சத்குருவை இப்பிறவியிலேயே அடைய முடியும். இப்படி திருவண்ணாமலையில் கிரிவலம் மேற்கொள்ள பல்வேறு முறைகள் உள்ளன.
Tags:    

Similar News